பாஜக இருக்கும் வரை மு க ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று பாஜக வின் முரளிதர் ராவ் சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை ஸ்டாலின் முதல்வர் ஆனால் பாஜகவை கலைத்து விடுவாரா என்பதை அவர் சொல்லவில்லை. ஏன் என்றால் அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தனி கட்சி நடத்தி வருகிறார். அவர் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு வசிக்கும் வீரப்பன் மகள் வித்யாராணி பாஜக வின் சேர்ந்த நிகழ்ச்சியில் பேசிய ராவ் எப்படி பாஜக ஸ்டாலினை தடுக்கும் என்பதை விளக்கவில்லை.
திமுகவில் வேறு நபர் வந்தால் பாஜக அனுமதிக்குமா? அனுமதிப்பதற்கு இவர்கள் யார் ? மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர் ஆட்சிக்கு வரப் போகிறார். சட்டத்துக்கு புறம்பான முறையில் இவர்கள் தடுப்பார்களா? அதை மக்கள் அனுமதிப்பார்களா?
நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன? அவற்றையும் இவர்கள் அடக்கி விடுவார்களா?
வெகுமக்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக இயங்கிக் கொண்டு இங்கே காலூன்ற முயற்சிக்கும் பாஜக முதலில் தன்னை திருத்திக்கொள்ளட்டும்.
இது போன்ற மிரட்டல்கள் மூலம் ஸ்டாலினை அடிபணிய வைக்க முடியும் என்று நம்புகிறதா பாஜக?
இது போன்ற வெத்து மிரட்டல்கள் மூலம் மேலும் மேலும் இவர்கள் வெறுக்கப் படுவார்கள்.