தமிழக அரசியல்

புஷ்பவனம் குப்புசாமிக்கு இசைப் பல்கலை துணை வேந்தர் பதவி மறுக்கப் பட்ட மர்மம் என்ன?

Share

தமிழ்நாடு  நுண்கலை மற்றும் இசை பல்கலை கழகத்திற்கு துணை வேந்தராக  வீணை காயத்ரியை ஜெயலலிதா நியமித்திருந்தார்.

அவர் பட்டம் பெற்றவர் அல்ல.   நுழைப்பதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.    அது செல்லாது என்று தீர்ப்பு வந்ததாக சொல்கிறார்கள்.

அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை அவரால் தீர்க்க முடியவில்லை.   அவரது பதவி காலம் முடிந்தபின்  யாரையும் நியமிக்கவில்லை.

இந்நிலையில் அதிமுக வை சேர்ந்த அனிதா குப்புசாமியின் கணவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பல்வேறு காரணங்களால் அந்த பதவி மறுக்கப் பட்டிருக்கிறது.

விண்ணப்ப காலம் முடிந்தபின் கேட்டுபெற்று பிரமிளா குருமூர்த்தி  அந்த பொறுப்பில் அமர்த்தப் பட்டிருக்கிறார்.

புஷ்பவனம் குப்புசாமி விண்ணப்பத்தை நிராகரிக்கவே புதிதாக பத்தாண்டுகளுக்கு இசை பயிற்று வித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை புதிதாக சேர்க்கப் பட்டதாம்.

பிற்பட்டவர்கள் கர்நாடக இசை உலகில் நுழையவே முடியாது.   நுழைந்தாலும் அங்கீகாரம் கிடைக்காது. அவமானப் படுத்தப் பட்டு வெளியேற்றப் படுவார்கள்.

பல தடைகளை மீறித்தான் குப்புசாமி கர்நாடக இசையை பயின்றி ருக்கிறார்..

உண்மையில் கர்நாடக  இசை என்பது தமிழிசையே என்பது அவரது நிலைப்பாடு.

சிலப்பதிகாரம் தொல்காப்பியம்  காலத்திலிருந்தே நிலவி வந்த ஆதி தமிழ் இசையை தான் கர்நாடக இசை என்று சொல்ல வேண்டும்.

மாறாக மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய சம்ஸ்கிருத தெலுகு இசை எப்படி கர்நாடக இசையாகும்.?

தமிழ் இசையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்து அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கு சொந்தமான இசையை களவாண்டு கர்நாடக இசை என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை அவமானப் படுத்துவதை சகிக்க முடியாது.

கொடுமை  என்னவென்றால்   ஒரு தமிழருக்கு கிடைக்க வேண்டிய பதவி தமிழர் ஆட்சிக் காலத்தில் கிடைக்க வில்லையே?

தமிழன் ஆட்சியில் இருந்தால் மட்டும் போதாது.   அவன் தமிழ் உணர்வு உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டால் ஒருவேளை இன்னும் பல சதிகள் வெளி வரலாம்.

This website uses cookies.