நவநீதகிருஷ்ணனின் தற்கொலை பேச்சு ஒரு தேசிய அவமானம்; நாடகமாடும் பா ஜ க அரசு துணை போகும் அதிமுக?!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

அதுவரை பொறுத்திருப்போம் என்று ஓ பி  எஸ் சொன்னதே ஒரு ஏமாற்று வேலை.

மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேற்பார்வை ஆணையம் அமைப்போம் என்ற ஏமாற்று திட்டத்தை முன்வைத்து அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

அதுகூட உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு வந்தால் சமாளிப்பதற்குத்தான்.

ஒரு பக்கம் கர்னாடக தேர்தலுக்கு முன்பாக மேலாண்மை ஆணையம் அமைப்பதில்லை என்ற முடிவில் பா ஜ க உறுதியாக இருக்கிறது.

முடிந்தாலும் அமைப்பார்களா என்பது சந்தேகமே?

மறுபக்கம் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கியதன் மூலம் தெலுகு தேசம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்க விடாமல் பா ஜ க வுக்கு அதிமுக உதவிக் கொண்டு இருக்கிறது.

இதை விட மோசமான அயோக்கியத்தனம் இருக்க முடியாது.

கெடு முடியும் தருவாயில்   அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் மேலாண்மை ஆணையம் அமைக்க வில்லை என்றால் அதிமுக உறுப்பினர்கள்  தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்.

தமிழகத்திற்கே தலைகுனிவு.    வெட்கக் கேடு!

ஒரு அதிமுக உறுப்பினரும் விளக்கம் கொடுக்க கூட தயாராக இல்லை.

இதற்கா அனுப்பினார்கள்? .   பாராளுமன்ற உறுப்பினர்கள் கடமை தற்கொலை செய்வதா?

இதனால் பாஜக பயந்து விடுமா?   கேலிக்கு ஆளாவோம் என்ற அச்சம் கூட இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசி பிரபலமானால் போதும் என்ற கொள்கையா?

அதிமுக இதற்கு விளக்கம் தர வேண்டும்.    அது அவர் தனிப்பட்ட கருத்து என்று தள்ளிப் போகக் கூடாது.

இ பி எஸ் – ஒபீஎஸ் கூட்டணி  பாஜக அடிமைக் கூட்டணி என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி  விட்டார்கள்.

இந்த நாடகமாடிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.