ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது இருக்கட்டும்.
வரவே மாட்டார்! வந்தால் அவர் மோடி அடிமையாகத்தான் இருப்பார் என்று நேற்று அவர் அளித்த பேட்டியிலேயே தெரிந்து விட்டது.
7 பேர் விடுதலை என்றாலே அது ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்தான் என்பதைக்கூட ஊகிக்காமல் எந்த 7 பேர் என்று அவர் கேட்ட உடனேயே அவர் எந்த அளவு தமிழக அரசியலில் அக்கறையாக இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.
பா ஜ க ஆபத்தான் கட்சியா என்றால் எதிர்க்கிற கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்கிறார். மக்களுக்கு ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்கிறார். உங்கள் கருத்து என்ன என்றால் அதை இப்போது சொல்ல முடியாது. என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நான் இன்னும் முழுவதுமாக அரசியலில் இறங்கவில்லை என்கிறார்.
அன்றாடம் நடக்கும் கூட்டங்கள் பற்றி நான் வெளியே சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் . முழுவதுமாக நான் அரசியலில் இறங்கும்போது தெளிவாக சொல்கிறேன் என்கிறார்.
எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே என்றால் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் யார் பலசாலி ஒருவரா பத்து பேரா என்று கேள்வி கேட்கிறார். அயோக்கியன் பலசாலியாக இருந்தால் பலசாலி என்பதற்காக அவனோடு சேருவீர்களா? எதிர்ப்பவர்கள் பலவீனமான பத்து பேர் என்பதற்காக அவர்களோடு சேர மாட்டீர்களா?
யார் வர வேண்டும் என்பது முக்கியமா? யார் பலசாலி என்பது முக்கியமா?
பா ஜ க வோடு கூட்டணி வைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி தான் பா ஜ க விற்கு எதிரானவன் என்று சொல்ல மறுக்கிறார்.
சர்கார் பட பிரச்னை பற்றிகூட ரஜினியின் கருத்து குழப்பம். ‘எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை உடைப்பது பேனரை கிழிப்பது படத்தை நிறுத்துவது சரியல்ல என்றவர் பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்படி செய்யலாம் என்கிறார். பேச்சு வார்த்தை முறிந்தால் அதையெல்லாம் செய்யலாமா?
மொத்தத்தில் தன் மிகச்சிறந்த குழப்ப வாதி என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் ரஜினிகாந்த் .
அதைவிட ஒரு வார்த்தை கூட மோடி அரசை விமர்சிக்காமல் தான் என்றுமே மோடியின் அடிமைதான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் ரஜினி.
இனி தமிழ் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும்.
This website uses cookies.