துணை முதல்வராக உள்ள ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் தான் துணைமுதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட தாக பேசினார்.
ஏற்கனெவே மோடியின் பா ஜ க தான் இந்த அரசை இயக்கி வருவதாக எல்லாரும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பா ஜ க – அ தி மு க இருவருமே அதை மறுத்து வந்திருக்கிறார்கள்.
இன்று இப்படி பேசினால் அது மோடிக்கும் சரி அ தி மு க அரசுக்கும் சரி பிரச்னையை உருவாக்கும் என்பதை அறியாதவரா ஓ பி எஸ்.
ஆக தெரிந்தே தான் பேசியிருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில் தான் பேசியிருக்க வேண்டும். அந்த சூழ்நிலை என்ன? மறைவில் செய்த ஒப்பந்தங்கள் அமுலுக்கு வரவில்லையே என்ற ஆதங்கமா? அந்த நிறைவேற்றப் படாத வாக்குறுதிகள் என்ன?
ஓ பி எஸ்- இ பி எஸ் க்கும் இடையே பா ஜ க தான் பஞ்சாயத்து செய்தது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
இவர்கள் எப்படி மத்திய அரசை மாநில உரிமைகளுக்காக எதிர்த்து பேசுவார்கள்? இவர்களிடம் எப்படி மாநில சுயாட்சியை பாதுகாக்கும் தன்மையை எதிர்ப்பார்க்க முடியும்?
அதனால்தான் ஆர் கே நகர் தொகுதி மக்கள் இவர்களை புரிந்து கொண்டு இந்த அடிமைகளுக்கு எதற்கு வாக்கு என்று தோற்கடித்தார்கள்.
ஓ பி எஸ் ன் இந்த வாக்குமூலத்திற்கு முதல்வரோ மற்ற அமைச்சர்களோ எந்த விளக்கமும் தர முன்வரவில்லை.
தமிழக பா ஜ க மட்டும் தயக்கத்தோடு மறுத்து பேசியது.
பேசியது ஒரு துணை முதல்வர். அது தவறென்று பொறுப்புள்ள முதல்வர் மறுத்திருக்க வேண்டும். தவறு என்றால் துணை முதல்வராக நீடிப்பது எப்படி?
இந்த மத்திய அரசின் அடிமைகள் ஆட்சியில் தொடர்வது ஒவ்வொரு நாளும் அனைத்து தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்திக் கொண்டே இருக்கும்.
மாநில அரசின் உரிமைகளை பறித்துக் கொண்டு எல்லா அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு மற்றவர்களை அடிமைப் படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் மோடியின் பா ஜ க காலூன்ற இவர்கள் கைத்தடிகளாக பயன் படப் போகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
மக்கள் விழித்துக் கொண்டார்கள். உங்கள் சூழ்ச்சி இங்கே எடுபடாது.
This website uses cookies.