அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் கிட்டத்தட்ட பாஜக உறுப்பினர் போலவே பேச ஆரம்பித்து விட்டார்.
அதிமுக இதுவரை முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ரவீந்தர நாத் குமார் ஆதரித்து பேசியது மட்டுமல்ல ஒருபடி மேலே போய் வேதகாலத்தை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்.
‘வேத காலத்தில் நாட்டில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப் பட்டது. அன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டார்கள். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் கூட அமர வைக்கப்பட்டார்கள்.’ என்றெல்லாம் பேசியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலம் அல்லவா வேதகாலம்.
அவர்களுக்குக் என்ன அதிகாரம் எப்போது யாரால் வழங்கப்பட்டது?
பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட வரலாறுகள் தான் அதிகம்.. பின் ஏன் ரவீந்திரநாத் இப்படி பேசவேண்டும். நிர்பந்தம்?! தேவை? கொஞ்ச காலம் முன்புதான் அதிமுகவின் அன்வர் ராஜா அதே அவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பேசி நீங்கள் இறைவனின் சாபத்துக்கு ஆளாவீர்கள் என்று கடுமையாக கண்டித்து பேசினார். ஏன் அதிமுகவின் நிலை மாறியது? எப்படி மாறியது?
குன்னம் ராமச்சந்திரன் திடீர் என்று இந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துவிட்டு இது எனது தனிப்பட்ட கருத்து என்கிறார். எல்லாம் நாடகம். ஆழம் பார்க்கிறார்கள். எதிர்ப்பு வருகிறதா யாரிடம் இருந்து வருகிறது என்று?
அதிமுக இந்திக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு பாஜக அளவுக்கு அதிகமாக நெருக்கடி கொடுக்கும். அதை மறுக்கும் தெம்பு இவர்களுக்கு இருக்கப்போவதில்லை.
அடிமைகள் குரல் வெளியே வர ஆரம்பித்து விட்டது!!!