மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரி மலை யாத்திரை சென்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நடந்து வரும் பிரச்னைகளால் காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து சட்ட ஒழுங்கை பாதுகாத்து வருகிறார்கள்.
ஒரு இடத்தில் அவரது காரை மட்டும் அனுமதித்து அவருடன் வந்தவர்கள் கார்களை காவல் துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது .
அதை பொன்னார் பிரச்னை ஆக்கி இருக்கிறார். அவருடன் விவாதித்த காவல் துறை அதிகாரி தன் உடல் மொழியால் தனக்கு உரிய மரியாதை அளிக்க வில்லை என்ற குறை இருந்திருக்கலாம்.
அவர் திரும்பி வந்தபோதும் இதே பிரச்னை வந்திருக்கிறது. போலிஸ் அத்துமீறி நடக்கிறது என்பது பாஜக-வின் குற்றச்சாட்டு.
கேரள இடது சாரி அரசை குற்றம் சுமத்துவதே பாஜக வின் நோக்கமாக இருக்கிறது.
முத்தாய்ப்பாக கேரள அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது பாஜக.
ஆக அரசியல் செய்யத்தான் இத்தனையும்.
தனக்கிருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் பொன்னார்.
This website uses cookies.