இன விடுதலைக்காக போராடிய உலகத் தலைவர்களில் பிரபாகரனோடு ஒப்பீடு செய்யத் தக்கவர் வெகு சிலரே.
தான் மட்டும் இல்லாமல் தன் குடும்பத்தையே விடுதலைப் போரில் ஈடுபடுத்தியவர்.
போராளிகளின் தாகம் விடுதலையே தவிர எவரையும் அழிக்க அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர். சிங்களர் உடன் ஆன போரிலும் யுத்த தர்மத்தை மீறாதவர்.
கட்டுப்பாடுகள் நிறைந்த போராளிகள் வாழ்க்கை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதது.
சுயநலம் தவிர்த்த போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்தியாவின் துரோகம் , ஆதிக்க நாடுகளின் வணிகக் கணக்கு , ஐ நாவின் பாராமுகம், விலைபோன இன துரோகிகள் என்று பல சக்திகள் புலிகளின் தோல்விக்கு காரணமாயின.
இன்றைக்கும் சிறிசேன புலிகள் வீழ்த்தப் பட்டாலும் இன்னமும் அவர்களின் குரல் உலகமெங்கும் உயிர்ப்போடு இருக்கிறது என்று அச்சம் கொண்டு பேசுகிறார்.
மாவீரர் தின உரையை கேட்க உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும்.
லட்சக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப் பட்ட நாளில் அந்த மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
குறைந்த பட்சம் வீட்டில் இருந்தாவது மௌன அஞ்சலி செலுத்துவோம்.
மெரினாவில் அஞ்சலி செலுத்த தடை விதித்த தமிழக அரசு பெரிய தவறை செய்து விட்டது.
யாருக்கோ பிடிக்காது என்பதற்காக நமது முன்னோரை நாம் வழிபடுவதை நிறுத்தி விடுவோமா??
நமது எல்லா குல தெய்வங்களும் நமது முன்னோர்களே. அவர்களை வணங்குவது என்பது மரியாதை செய்வதற்குத்தான்.
குலதெய்வ படங்கள் வரிசையில் பிரபகரன் படமும் இடம் பெறட்டும்.
பிரபாகரன் நமது முன்னோர்களின் பட்டியலில் இடம் பெற்று வணங்கத் தக்க தமிழர் குல சாமி என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.