முந்தைய நாள் தான் ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கிவிட்டதாக எழுதியிருந்தோம்.
இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் நம்ப முடியாமல் அதிர்ச்சி தந்து கொண்டிருக்கின்றன.
அங்கே ஓட்டுக்கு 1000 தந்து விட்டார்கள் என்றும் இங்கே ஓட்டுக்கு 2000 தந்து விட்டார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. அதோடு கூட சில இடங்களில் ஓட்டுக்கு ரு 5000 தந்து விட்டார்கள் என்றும் தருவதாக உததரவாதம் தந்திருக்கிறார்கள் என்றும் செய்திகள். உத்தரவாதம் தந்தவர்கள் ஆர் கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் தந்தவர்கள். எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள்.
இதற்கிடையில் பலரும் பணமும் வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப் படிதான் வாக்களிக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் இந்த பண ஆதிக்கம்.
சென்ற தேர்தலில் ஒரு நிறுவனம் மூலம் 650 கோடி கொடுத்து ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று இப்போது ஒரு ஆங்கில பத்திரிகை எழுதுகிறது.
எங்கள் வாக்குகள் விற்பனைக்கல்ல – என்ற அறிவிப்புகள் எத்தனை ஊர்களில் இருக்கின்றன?
ஏன் எங்களுக்கு வரவில்லை என்றுதானே கேட்கிறார்கள்!!
இந்த பண ஆதிக்கத்தையும் மீறி மக்களாட்சி வெற்றி பெற்றால் அதிசயம்தான்.
This website uses cookies.