டெல்லி எஜமானர் தந்த உத்தரவை அப்படியே நிறைவேற்றி விட்டார் முதல்வர் பழனிச்சாமி .
தினகரனை நீக்கியாகிவிட்டது. ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விசாரிக்க கமிஷன் அமைத்தாகிவிட்டது.
இனி என்ன இணைப்பு நடக்க வேண்டியது தான் . பா ஜ க உடன் கூட்டணி ஒப்பந்தம் போட வேண்டியதுதான்.
ஓ பி எஸ் அணியிலும் இனி பூசல் ஆரம்பிக்கும். தினகரன் தூண்டி விட்டுத்தான் சண்டை போடுகிற மாதிரி நடித்து ஒப்புக்கு ஒரு கமிஷனை அமைக்க ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என சந்தேகிக்க இடம் உண்டு. ஏன் தினகரன் கமிஷன் வேண்டும் என்று கேட்க வேண்டும்?
சி பி ஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்று கூட கோரிக்கையை மாற்றலாம்.
மர்மம் விலகாத மரணமாகவே ஜெயலலிதாவின் மரணம் தொடரும் சூழ்நிலை தான் இன்று வரை நிலவுகிறது.
கண் துடைப்பு விசாரணை என்றும் காலம் கடந்தது என்றும் விமர்சனம் எழலாம்.
ஒய்வு பெற்ற நீதிபதி யார் என்பது பல கோடி கேள்விகளை உருவாக்கும்.
நீதிமன்றம் செல்லும் இந்த முடிவு. தீர்ப்பு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன் பின் தான் விசாரணை.
நேதாஜி பற்றிய விசாரணை இன்னும் முடியவில்லை.
அப்போலோ மருத்துவமனை விசாரணையை வரவேற்றிருகிறது .
இனி ஓ பி எஸ் என்ன சொல்லி தனி அணி தொடர்வார்.? ஒரு வகையில் இது தினகரனுக்கு வெற்றிதான்.
ஓ பி எஸ்ஸின் தர்ம யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதே?!
அதிகாரத்தை கையில் வைத்திருந்தால் யாரையும் எப்போதும் ஏமாற்றலாம் .