கடைசியில் மலை தூக்கி பயில்வானாகி விட்டார் ரஜினி.
நான் மலையைத் தூக்க தயார்! என் தோளில் மலையைத் தூக்கி வைக்க நீங்கள் தயாரா ? என்று கேட்ட மலை தூக்கி பயில்வான் கதை அப்படியே அரங்கேறி விட்டது.
மக்கள் முதலில் புரட்சியை ஆரம்பிக்க வேண்டுமாம். அந்த புரட்சி வெடித்து விட்டால் அப்புறம் இவர் வருவார்.
இனி எத்தனை ரசிகர் மிச்சம் இருப்பார்கள் என்பதை முதலில் பார்ப்போம் ?
மூன்று திட்டங்களுமே நடைமுறைக்கு ஒத்து வராதது.
கட்சி வேலை செய்பவர்கள் தேர்தல் முடிந்ததும் வீட்டுக்கு போய் விட வேண்டும். ஆட்சிக்கு வேறு நபர்கள் வருவார்கள். எவன் அப்படி கட்சி வேலை செய்ய வருவான் ?
அப்படி வரும் புதியவர் யார் அவரை எப்படி தேர்ந்து எடுப்பீர்கள்? ஒரு விளக்கமும் இல்லை.
இளைஞர்களுக்கே தேர்தலில் டிக்கட் தருவார். இப்போதிருக்கும் முதிர்ந்த ரசிகர்கள் ஒய்வு பெற வேண்டும்.
கட்சி தலைமை வேறு. ஆட்சி தலைமை வேறு. அவரை எப்படி தேர்ந்து எடுப்பீர்கள்? விளங்குமா ?
இவர் முதல்வர் வேட்பாளர் இல்லை. முடிந்தது கதை.
முதலில் ரஜினிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். தான் முதல்வர் வேட்பாளர் இல்லை. அந்த சிந்தனையே தனக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று சொல்லிவிட்டாரே !
மக்களை அறிவில்லாதவர்கள் என்று சொல்கிறார். அவர்கள் இவருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்.?
அண்ணாவை இவர் மதிக்கிறார். ஏனென்றால் அவர் பல தலைவர்களை உருவாக்கியவர். ஆனால் அண்ணா எந்த கொள்கைகளுக்காக போராடினார் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.
அதேபோல் தமிழகத்தில் காந்தியும் விவேகானந்தரும்தான் இவர் கண்ணுக்கு தெரிகிறார்கள். நீதிக் கட்சி தலைவர்கள் பெரியார் காமராஜர், ஜீவானந்தம், கக்கன் போன்ற யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. குருமூர்த்தி எழுதிக் கொடுத்த ஸ்க்ரீப்டில் அது இல்லை போல் தெரிகிறது.
சமூக நீதி பற்றி மொழி பாதுகாப்பு பற்றி இன உரிமை பாதுகாப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை.
கிங் ஆக விரும்ப மாட்டார் என்பது உறுதி ஆகிவிட்டது. கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஆசை மட்டும் இருக்கும்போல.
அதற்கும் ஒரு தகுதி வேண்டாமா?
ஒதுங்கி விட்ட மனிதனை அதற்கு மேல் விமர்சிப்பது நியாயமல்ல.
விலகியதால் மிஞ்சியது மரியாதை.
This website uses cookies.