அதிமுகவுக்கு நன்றாக தெரிந்து விட்டது. மோடி ஆதரவு என்று சொன்னால் இங்கே மதிக்க ஆளிருக்காது என்று.
எனவே தேடிபிடித்து ரஜினி ரசிகர் மன்ற ஆட்களை வேலூரில் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக களம் இறக்கி விட்டிருக்கிறார்கள்.
எப்போதும் எல்லாத அளவுக்கு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின்னும் மோடிக்கு எதிர்ப்பு அலை அதிகமாக அடிக்கத் துவங்கி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.
எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக நெறிமுறைகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது பாஜக.
பின்னால் இருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் இதுதான் தக்க தருணம் என்று கணித்து காங்கிரசை இல்லாமல் செய்துவிட முயற்சித்து வருகிறது.
சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்ற ரஜினி தன் ரசிகர் மன்ற ஆட்களை உள்ளே விட்டு ஆழம் பார்க்கிறாரா?
வருங்கால கூட்டணி அமைய இப்போதே அச்சாரம் போடுகிறாரா?
ரஜினியை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று மாபா பாண்டியராஜன் சொல்லியிருப்பது அவர்களுக்கு உள்ளே இருக்கும் மோதலை காட்டுகிறது.
மொத்த அமைச்சரவையும் வேலூரில் களம் இறக்கி விடப்பட்டு இருக்கிறது.
இதற்கெல்லாமா மக்கள் மயங்கி விடுவார்கள்?