வன்னியருக்கு இட ஒதுக்கீடு பிரச்னையில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 % ஒதுக்கியவர் கலைஞர். அதில் வன்னியரோடு பல பிற்பட்டோரையும் சேர்த்ததில் ராமதாசுக்கு மனக்குறை இருந்தாலும் கோரிக்கை நிறைவேறியதில் அவருக்கு மகிழ்ச்சிதான்.
இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி திமுக தலைவர் முக ஸ்டாலின் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு திமுக ஆட்சியில் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது ராமதாசுக்கு தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.
ஏற்கெனெவே அருந்ததியருக்கு தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 3% உள் ஒதுக்கீடு செய்து அமுல் படுத்தியவர் கலைஞர். இப்போது ஸ்டாலின் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு செய்ய உறுதி அளித்துள்ளதால் அவரால் அதை செய்ய முடியும் . அதை அவர் செய்தால் தனக்குள்ள வன்னியர் பிரதிநிதி என்ற முத்திரை காணாமல் போய் விடும். அந்த அச்சம் தான் இப்போது மருத்துவரை ஆட்டிப் படைக்கிறது.
நன்றி சொல்லவும் முடியவில்லை. ஏன் என்றால் சில நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடியை சந்தித்து தன் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா அல்லது வழக்கில் இருந்து விடுபட உதவி கேட்டாரா என்பது தெரியவில்லை.
ஆனால் மறுநாள் சென்னை வரும் பிரதமரை அதற்கு முதல் நாள் டெல்லி சென்று சந்தித்தால் பல ஊகங்கள் வெளி வரத்தான் செய்யும்.
இந்நிலையில் பிரதமரை சந்தித்த கையோடு பிரச்சாரத்துக்கு செல்லப் போகிறேன் என்று அறிவித்திருப்பது ஊகத்துக்கு மேலும் வலு ஊட்டுவதாக அமைந்திருக்கிறது.
குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடு பிரச்னையில் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்பதாக அறிவித்திருக்கலாம். அதை செய்யவும் மருத்துவருக்கு மனமில்லை.
வன்னியர்களின் ஏகப் பிரதிநிதியாக இனி ராமதாஸ் கோலோச்ச முடியுமா என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்.
This website uses cookies.