ராஜேந்திர பாலாஜி நீக்கம் உண்மையான காரணம் இதுதான் ?

Share

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் துணை  ஒருங்கிணைப்பாளர்          பழனி சாமி  ஆகியோரால் இன்று நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.

கொஞ்ச நாளாகவே ராஜேந்திர பாலாஜி தன்னை தனித்துவம் மிக்கவராக காட்டிக் கொண்டிருந்தார். மோடி எங்கள் டாடி , எல்லாவற்றையும் மேலே உள்ளவன் பார்க்துக் கொள்வான் என்றெல்லாம் பேசி அதிமுகவுக்கு அவப்பெயர் தேடித் தந்தவர் ராஜேந்திர பாலாஜி.

அதிமுக அரசு மோடியின் அடிமை என்று விமர்சிக்கப்  படுவதற்கு ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் மேற்கோள் காட்டப் பட்டு  வந்தன.

முன்பு அமைச்சர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்து தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டினார் முதல்வர் பழனிசாமி. அவர் அமைதியாக இருந்து விட்டார்.

இப்போது ராஜேந்திர பாலாஜி. அது அமைச்சர் பதவி . இது கட்சி பதவி. வருமானம் வரும் அமைச்சர் பதவியை பறிக்கப் பட்டவரே அமைதியாக இருக்கிறார். இது வெறும் கட்சி  பதவி தானே ?வருமானம் வரும் அமைச்சர் பதவியை பறிக்க வில்லையே? எனவே இவரும் அமைதியாகி விடுவார் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது.

அது என்னவென்றால் ஓட்டு  மொத்தமாக பாஜக  சொல்லும் வழியில் செல்ல முடிவெடுத்துவிட்ட ராஜேந்திர பாலாஜி பாஜக யோசனைப்படி ரஜினியின் கடசியில் சேர தீர்மானித்து விட்டதாகவும் அதை மோப்பம் பிடித்து விட்ட அதிமுக தலைமை சேதாரம் அதிகமாகாமல் இருக்க இப்போதைக்கு  கட்சி  பதவியை பறித்து  பலத்தை குறைக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

அதற்கு தோதாக கொறானா பீதியில் மாநிலமே முடங்கி இருக்கும் நிலையில் பதவியை பறித்தால் அவர் அடங்கி விடுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாம்.

எங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இருவரும் பாஜக மேலிடத்திற்கு சொல்கிறார்களா?

பார்க்கலாம். எதிர்பார்ப்பு பலிக்கிறதா?இல்லை ராஜேந்திர பாலாஜி சிலிர்த்துக் கொள்வாரா என்பதை?

இதையும் மேலே உள்ளவன் பார்த்துக் கொள்வான் !!அப்படித்தானே அமைச்சரே?

This website uses cookies.