தமிழக அரசியல்

தமிழ்த் தேசியம் பேசினால் தேசத் துரோக வழக்கா? வேல்முருகன் மீதான அடக்குமுறை எதைக் காட்டுகிறது?

Share

பொய் வழக்கு போடுவது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை.

அதை எதிர்கொள்வது எதிர்கட்சிகளுக்கு பேரும் சவால்.  எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

அவர்தானே மாட்டிக் கொண்டிருக்கிறார்.   தானாகவே வெளியே வரட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் மற்றவர்கள்.

இந்த ஒற்றுமை இன்மை ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விடும்.   அதுதான் எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை தொடர் கதை ஆகி வருகிறது.

இன்றைக்கு வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.     பா ம க இதை எதிர்த்து குரல் கொடுக்காது.     எதிரியை விட பங்காளியை ஆபத்தானவனாக பார்க்கும் பார்வை கோளாறு.

அதேபோல் சீமான் மீது ஏதாவது வழக்கு பதியப் பட்டால் இதர தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடாது.    ஏன் என்று கேட்டால் அவர் எங்களோடு பயணிக்கிறாரா என்று திரும்பக் கேட்பார்கள்.

அதனால்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு காவலர்கள் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகுதான் நடந்தது என்று ரஜினி ஆதாரமில்லாமல் பேசியது நடந்தது.  போராட்டம் நடத்தியவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும். அதற்காக அவர் யார் சொன்னதையாவது கேட்டுக் கொண்டு பேசத் தயாராகி விட்டார்.   மத்திய  ஆளுங்கட்சி கையாள் என்று தன்னை நிருபித்து கொண்டார் ரஜினி.

பொய் வழக்குப்  போட்டால் எதிர்த்து போராட தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு ஏற்பாட்டை செய்ய அவசரமாக முன்வர வேண்டும்.

சீமான், வேல்முருகன்,  பாரதிராஜா, அமீர், வைகோ , பழ. நெடுமாறன், கௌதமன், திருமுருகன் காந்தி, கோவன், என்று நீளும் பட்டியல் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஆதாரம் இருந்து நடவடிக்கை எடுக்கப்  பட்டால் யாரும் ஏன் என்று கேட்கப் போவதில்லை.

எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கு  புனைவதுதான் கேள்வி.

எது தேச துரோகம் என்பது முதலில் நிர்ணயிக்கப் படவேண்டும்.

உரிமை  கேட்டால், ஆபத்தை எதிர்த்தால் தேச துரோகமா?

வெள்ளையர் ஆட்சி போய் இந்திக்கார்கள் ஆட்சி வந்து  விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில். ?

This website uses cookies.