அதிமுக -பாஜக உறவு கணவன் மனைவியைப் போன்றது? முரளிதர் ராவ் அதிர்ச்சி வர்ணனை

muralidhar-rao
muralidhar-rao

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருக்கும் உறவை இதுவரை பாஜக செயலாளர் முரளிதர் ராவைப் போல் யாரும் சொன்னதில்லை.

அதிமுக -பாஜக இடையே இருக்கும் உறவு கணவன் மனைவி உறவைப் போன்றது என்றார் ராவ்.

இந்துக்கள் மட்டுமே கணவன் மனைவி உறவு புனிதமான பந்தமாக பாவிக்கிறார்கள். இஸ்லாம் அதை ஒரு ஒப்பந்தம் என்றே கருதுகிறது. கிறித்துவம் இறைவன் போட்ட முடிச்சை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவான் என்கிறது.

அதிமுக இனி எங்களிடம் இருந்து பிரிந்து போக முடியாது நாங்கள் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டோம் என்பதைத் தான் முரளிதர் ராவ் அப்படி கூறுகிறாரா?

மேயர் தேர்தலை மறைமுக தேர்தலாக்கி பாஜகவின் கனவை உடைத்த எடப்படியின் மேல் உள்ள கோபத்தில் அப்படி கூடுகிறாரா ராவ்?

அதிமுக கூட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பதை வெளியில் சொல்ல மாட்டோம் என்கிறார் ராவ். கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை யாராவது வெளியில் விவாதிப்பார்களா என்கிறார் ராவ்?

அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் அதிகம். அப்படியானால் எத்தனை திருமணங்களை அதிமுக செய்திருக்கிறது? யாருக்கு விசுவாசமாக இருக்கும்?  நவீன பாஞ்சாலி கதையாக இருக்கிறதே என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? 

மத்திய பாஜக அரசின் அடிமையாக அதிமுக அரசு நடந்து கொள்கிறது என்ற விமர்சனங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கிற வகையில் இருக்கிறது முரளிதர் ராவின் பேச்சு?