திமுக – அதிமுக இரண்டோடும் கூட்டு இல்லை தனித்தே நாற்பது தொகுதிகளிலும் போட்டி என்று கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
திமுகவோடு கை குலுக்கி என் கையை கறையாக்கிப் கொள்ள மாட்டேன் என்று சொல்லி தன் திமுக வெறுப்பை வெளிக்காட்டினார் கமல்.
முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தனது புதிய தலைவர் மூலமாக கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது விந்தையாக இருக்கிறது.
பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் கமல். மறைமுகமாக அது அதிமுக ஆதரவு நிலை தான்.
இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் அழைப்பை ஒருவேளை கமல் ஏற்றால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகி கமலுடன் சேருமா? அதற்கு வாய்ப்பே இல்லை.
கமல் திமுக கூட்டணியில் சேர தயார் என்று சொன்னாரா?
தனது முதல் எதிரி என்று கமல் யாரை அடையாளம் காட்டுகிறார் ?
மோடி அரசு மீண்டும் வரவேண்டும் என்கிறாரா? அல்லது மோடி அரசு மீண்டும் வராமல் தடுப்பேன் என்கிறாரா? இந்த இரண்டு நிலைப்பாட்டில் ஒன்றை கமல் அறிவிக்காதவரை அவரை அழைப்பதில் என்ன பொருள் இருக்கிறது?.
நாற்பதிலும் நின்று தனது வாக்கு வங்கியை நிருபித்து சட்ட மன்ற தேர்தல்களில் தனது பேரம் பேசும் சக்தியை உயர்த்திக் கொள்ளும் திட்டம் கமலுக்கு இருப்பதாகத் தான் தெரிகிறது.
கழகங்கள் இல்லா தமிழகம் என்ற பாஜக-வின் முழக்கத்தை வேறு வகையில் வெளிப்படுத்தும் கமல்ஹாசன் உள்ளிருந்தே கொல்லும் நோய்??!!