மூவேந்தர் வரலாறுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் பட்டன.
ஏனென்றால் தமிழர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் நெறியையும் கொண்டிருந்தார்கள் என்பதுதான். அதை தமிழர்கள் உணர்ந்து கொண்டால் தங்களது ஆதிக்கம் பிற்காலத்தில் உருவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களே என்று பார்ப்பன சக்திகள் அஞ்சியது காரணம்.
அதன் ஒரு பகுதிதான் ராஜராஜன்-உலகமாதேவி சிலைகள் , மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும்போதே , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சருக்கை ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக கோவில் அதிகாரிகளால் கடத்தப் பட்டு சென்னை கௌதம் சாராபாய் என்பவருக்கு விற்கப் பட்டு , இப்போது சிலை கடத்தல் பிரிவு ஐ ஜி பொன் மாணிக்கவேல் குழுவினரால் குஜராத் அகமதாபாத் நகரில் காலிகோ மியூசியத்தில் இருந்து மீட்கப் பட்டு மீண்டும் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப் பட இருக்கும் செய்தி.
ராஜராஜன் சிலை நூறு கோடியும் உலகமாதேவி சிலை ஐம்பது கோடியும் சர்வதேச மார்க்கெட்டில் விலை போகும் என்பது கூடுதல் செய்தி. இரண்டும் ஐம்பொன் சிலைகள்.
வெறும் பணத்திற்காக மட்டும் இந்த சிலை கடத்தல் நடைபெற்றிருக்குமா?
குந்தவை பிராட்டியார் அளித்த இரண்டு உமா பரமேஸ்வரி சிலைகள்- ராஜராஜனின் தந்தை பொன் மாளிகை துஞ்சின தேவர் சிலை, தாயார் வானவன்மாதேவி சிலை, போன்றவையும் திருடப் பட்டிருக்கின்றன. தந்தை தாயார் சிலைகளுக்கு ராஜராஜ சோழன் கட்டளைப்படி தினமும் பெரிய கோவிலில் அபிஷேகம் நடந்து வந்திருக்கிறது.
இவைகளை நிறுத்துவதற்கு இந்த கடத்தல்கள் நடைபெற்றிருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது. பணத்திற்காக திருடப் பட்டது என்ற பெயர் கட்டுவதற்காக மேலும் அங்கிருந்த பல சிலைகளை கடத்தி இருக்கின்றனர்.
தங்கத்தால் செய்த கொல்கைதேவர் சிலை காணவில்லை. நான்கு வசுதேவர் சிலைகளும் சேத்திர பாலர் சிலையும் திருடப் பட்டிருக்கின்றன. சீனிவாச கோபாலாசாரி சிலைகள் விற்ற பணத்தில் வேப்பேரியில் ஏழு கிரௌண்டு நிலம் வாங்கியிருக்கிறார். அதையெல்லாம் விசாரிக்கப் போகிறார்கள். இவையெல்லாம் பொன். மாணிக்கவேல் கொடுத்த பேட்டியில் கண்ட விபரங்கள்.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்ட ஒரு குழுவினர் இதில் பங்கேற்று இந்த முறைகேட்டை வெளிக் கொணர்ந்துள்ளனர். பாராட்டுக்குரியவர்கள்.
இன்னும் பதினோரு சிலைகளை கண்டுபிடிக்க வேண்டுமாம்.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் கட்டுப் பாட்டில் இருக்கும் கொவில்களுக்கே இந்தக் கதி என்றால் பாதுகாப்பு இன்றி இருக்கும் மற்ற கோவில்களில் என்னென்ன நடக்கும்?
இந்த செய்தி வரும் இன்றே இன்னொரு செய்தியும் வெளியானது. திருவள்ளூர் ஊத்துகோட்டை அக்னீஸ்வரர் கோவிலில் சிவ-பார்வதி ஐம்பொன் சிலைகளை களவாடி இருக்கிறார்கள்.
கோவில்கள் இறைவனின் குடில்களா? பொக்கிஷ அறைகளா?
பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் மீண்டும் கோவிலுக்குள் வைக்கப் பட்டு தகுந்த மரியாதைகள் செய்யப் பட வேண்டும். பல சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டிருக்கலாம் என சந்தேகிக் கிறார்கள்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமா?
This website uses cookies.