ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும் ; சீமானின் உணர்ச்சிப் பேச்சு?!

rajini-seeman
rajini-seeman

ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும்

ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது சீமான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ரஜினி ரசிகர்ளை விமர்சித்து பேசியிருக்கிறார்.

யாரைப்பார்த்தாலும் தலைவர் படத்தை பார்த்தியா அவர் அப்படி பண்ணியிருக்கிறார் இப்படி பண்ணியிருக்கிறார் என்று ரஜினிகாந்த் படத்தை பற்றி பேசுவதை விமர்சித்தார்.

ரஜினி யார். அவர் ஒரு நடிகர். அவர் தலைவர் என்றால் நாட்டிற்கு உழைத்த காமராஜர், கக்கன், ஜீவா, ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர் எல்லாம் யார்.? ரஜினி தலைவர் என்று சொல்ல அவர் என்ன செய்து விட்டார்.? இதுதான் சீமான் பேச்சின் சாரம்.

தலைவர்களை திரையில் தேடி பழக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கேரளாவில் அப்படி இல்லை. ஆந்திரா தவிர வேறு எங்கும் அப்படி இல்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

         தமிழகத்தில் அரசியல் தலைவராக வர வேண்டும் என்றால் அவருக்கு  தமிழ் நாட்டைப்பற்றிய பூகோள அறிவு இருக்க வேண்டும். தமிழ்ச்சமுதாயத்தின் எல்லா பிரச்னைகளும் தெரிந்திருக்க வேண்டும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய தொலை நோக்கான தெளிவான பார்வை இருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருக்க வேண்டும்.   

தொழில் எதுவாக இருந்தாலும் அவருக்கு மேற்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

ரஜினிக்கு கமலுக்கு இந்த தகுதிகள் இருக்கிறதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய  வேண்டும்.

ரசிகர்களை பொறுத்த வரை அவர்கள் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  யார் ரசிகர்கள்? நம் தம்பி தங்கைகள். மாமன் மச்சான்கள்.  தவறான வழியில் போனால் திருத்த என்ன செய்வோமோ அதைத்தான் செய்ய வேண்டும்.

சாகடிக்க வேண்டும் என்று சீமான் பேசியது உணர்ச்சி வசத்தால்.   அதனால்தான் உடனேயே அல்லது நாம் செத்துப் போய் விட வேண்டும் என்று பேசினார்.

    ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் சமூக பிரச்னைகள் தொடர்பாக அரசியலில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லி விட்டு தாராளமாக வரலாம். அது இல்லாமல் வெறும் பந்தா காட்டிவிட்டு , பூச்சி காட்டலாம் என்று  அரசியலுக்கு வந்தால் விளைவு என்னவாகும் என்பதைத் தான் சீமான்  பேசியதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.