100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்ட முடிவில் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப் பட்டனர் தூத்துக்குடியில்.
யார் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது என்ற கேள்விக்கு
நேரடியான பதில் கிடைக்க வில்லை உடனேயே!
ஒரு சம்பவத்திற்கு இருநூறுக்கும் மேலான வழக்குகள்
நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழக்காக்கியது
போராடியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்
நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்திருக்கிறது
மாநில அரசின் மீதான குற்றச்சாட்டை அதுவே
விசாரித்துக் கொள்ளுமா? எனவேதான் சிபி ஐ
காவல் துறை மக்களுக்கு எதிரான ஏவல் துறையானது
எப்படி ஏன் யாரால்? எல்லாவற்றுக்கும் பதில் வேண்டும்
மூடிவிட்டோம் என்கிறது தமிழக அரசு
பசுமை தீர்ப்பாயம் நிர்வாகம் செய்ய அனுமதி அளிக்கிறது
செயல்பட முடியாதவர்கள் எதை நிர்வகிக்க போகிறார்கள்?
முழு அனுமதிக்கான முன்னேற்பாடா என்ற ஐயம் தீர்க்க
அப்பீல் போயிருக்கிறது தமிழக அரசு -பாராட்டுவோம்
உச்சநீதி மன்றம் என்ன செய்யுமோ என்ற கவலையும்
தமிழ் மக்களை வதைக்கிறது! அனில் அகர்வால்
அப்படிப்பட்டவர் ஆயிற்றே ? ஆமாம்
துப்பாக்கி சூட்டில் இத்தனை பேர் இறந்தபிறகும்
அப்பீல் போனால் அவனெல்லாம் என்ன மனிதனா
என்று கேட்ட ரஜினி இப்போது எங்கே?