தமிழக அரசியல்

இட ஒதுக்கீட்டில் மோசடி செய்யும் அதிகாரிகளை பணி நீக்க செய்ய வேண்டும்?!

Share

இட ஒதுக்கீடு என்பது போராடிப் பெற்ற சமூக நீதி உரிமை.

ஆனால் அதை முழுவதுமாக நிறைவேற்ற விடாமல் அவ்வப போது பதவியில் இருக்கும் முற்பட்ட சமூகத்தவர்கள் தடுத்து வருகிறார்கள்.

அவர்கள் யார் என்று  இனங்கண்டு கொள்வது  கடினம். ஏன் எனில் அந்த பணியில் பல அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களால் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாத வகையில் விதிகள் இருக்கும். அதில் முறைகேடு என்றால் பலர் கூடித்தான் செய்ய வேண்டும்.

ஆக இடஒதுக்கீட்டை  மறுக்கும் வேலையை பலர் கூட்டாக சேர்ந்துதான் செய்ய வேண்டும். அப்படி என்றால் அந்த பணியில் எல்லாரும் முற்பட்ட சமூகத்தவர் ஆக இருந்தாக வேண்டும். பிற்பட்டோர் யாராவது இருந்தால்  அவர் முட்டுக்கட்டை போடக்கூடும்.

இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலில்  குளறுபடி செய்யப்பட்டிருக்கிறது.

தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொது பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில்  உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்து அவர்கள் இடங்கள் அதே பிரிவை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் செய்யும் சதியை செய்திருக்கிறார்கள். இதை தெரியாமல் செய்ய வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகள் நடைபெற்று தீர்ப்புகளும் வழங்கப்பட்டு இருந்தாலும் இந்த தவறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக எல்லா கட்சி தலைவர்களும் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதுதான் தெரியவில்லை.

கொடுத்துப் பறிக்கிற வேலையை முற்பட்டோர் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அதிகாரத்தில் உள்ள பிற்பட்டோர் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

அதிகாரம் கிடைத்தும் உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் தகுதி யானவர்கள் அல்ல என்று பொருள்படும்.

ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

This website uses cookies.