தூர்தர்ஷனில் அனைத்து மாநில செய்திகள் வாசிப்பதை நிறுத்தப் போவதாக வந்திருக்கும் செய்தி ஒற்றுமைக்கு உலை வைப்பது என்பது தெரிந்தும் ஏன் செய்கிறார்கள். ?
இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் தூர்தர்ஷனில் செய்தி படித்தால் போதும் என்று மத்திய அரசு முடிவு செய்ய என்ன காரணம்? மத்திய அரசு மாநில மொழிகளில் கருத்து பரிமாற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள விரும்புகிறது என்றுதானே பொருள் ?
மெல்ல மெல்ல அனைத்து இந்திய பயன்பாட்டில் மாநில மொழிகள் குறைக்கப் பட வேண்டும் என்றும் அதன் மூலம் இந்தியின் தேவை உணரப்பட்டு மாநில மக்கள் இந்தி மொழி பயன்பாட்டுக்கு ஈர்க்கப் பட வேண்டும் என்பதும் தான் டெல்லியின் நோக்கம்.
பா ஜ க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமஸ்கிருத மற்றும் இந்தியின் ஆதிக்கத்தில் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது. அது இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்குமா என்பது பற்றி அது கவலைப் படுவதாக தெரியவில்லை. அடக்கி ஆண்டவர்கள் அல்லவா? இப்போதும் அடக்கி விடலாம் என்பதுவே அவர்களது எண்ணம.
அதேபோல் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் பெயரை இந்தியா லிமிடெட் என்று சேர்த்திருக்கிறார் கள். ஏற்கனெவே மக்களிடன் இருந்து நிலம் கையகப் படுத்தும்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்ற போராட்டம் நிலுவையில் உள்ளது.
நிலக்கரி எடுப்பது தமிழ் நாட்டில் அதன் பலன் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுவதை நாம் பெரிதாக ஆட்செபிக்காத நிலையில் ஏன் இப்போது பெயர் மாற்றம்.?
இந்தியா என்பது இருந்தால்தான் நாளை அயல்நாட்டு நிறுவனங்களை உள்ளே நுழைத்து பயன் பெற முடியும் என்ற திட்டம் உள்ளதா என்ற ஐயம் எழுவதை எப்படி தடுக்க முடியும். ?
மொத்தத்தில் பா ஜ க என்பது மாநிலங்கள் என்பன தனித்து எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது தனி அதிகாரத்தையும் கொண்டிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
அடக்கி ஆள முயற்சித்தவர்கள் வென்றதாக வரலாறே இல்லை என்பதை பா ஜ க உணரும் காலம் விரைவில் வரும்.