தமிழக அரசியல்

ஜெயலலிதா படம் திறந்து தன்னை அவமதித்துக் கொண்ட சட்டமன்றம்??!! யார் காரணம்?? களங்கம் தீருமா?

Share

பார்ப்புக்கு ஒரு நீதி என்று பாரதி பாடியது உண்மையாகிவிட்டது.

பதினெட்டு வருடம் குற்ற வழக்கை இழுத்தடித்து தண்டனை பெற்ற பின்னும் சட்டம் இயற்றும் அதிகாரங்களை பயன்படுத்தி வாழ்ந்து கடைசி வரை குற்றத்திற்கான இறுதி தண்டனையை அனுபவிக்காமலேயே மறைந்து  விட்டார்.

ஆனால் குற்றம் இழைத்த முதல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்த மற்ற மூன்று  பேர் இன்று சிறையில்.    முதல் குற்றவாளி இறந்ததால் தியாகி போல சட்ட மன்றத்தில் மந்தகாச சிரிப்போடு படமாக காட்சியளிக்கிறார்.

மகாத்மா காந்தி, ராஜகோபாலாச்சாரி , திருவள்ளுவர், அண்ணா, காமராஜ், பெரியார், அம்பேத்கர்,  பசும்பொன் தேவர், முகம்மது இஸ்மாயில், எம் ஜி யார்    போன்ற பத்து தலைவர்களும் ஜெயலலிதாவோடு அங்கு இடம் பெற்று இருப்பது அவர்களுக்கு அவமானம்.   அவைகளை எடுத்து விடலாம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு எங்களை கட்டுப் படுத்தாது என்று தமிழக அமைச்சரவை தீர்மானித்து  சட்ட  மன்ற நிர்வாகியான சபாநாயகர் அதை ஏற்றுக் கொண்டு படத்தை திறந்து வைத்திருக்கிறார்.

இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இனி நீதிமன்றம்  என்ன தீர்ப்பு சொல்லும்.?

வைத்ததை எடுங்கள் என்று தீர்ப்பு சொல்லுமா?    குற்றவாளியை மதிப்போம் என்று நீங்களே முடிவு செய்யும்போது நாங்கள் யார் அதை தடுக்க என்று கேட்குமா?     நல்ல மரபு அல்ல என்று  மட்டும் சொல்லிவிட்டு கழன்று கொள்ளுமா?     வழக்கு  நிலுவையில் இருந்தபோதே ஏன் அதை இடைக்கால ஆணை போட்டு தடுக்க முயலவில்லை.?

இனி எந்த அரசு அதிகாரிக்கும்  தைரியம் அதிகரிக்கும்.     ஊழல் செய்வது குற்றமே அல்ல என்று கூட இனி வாதிடுவார்கள்?

விபசாரம் செய்வதை   பல மாநிலங்களில் குற்றம் என்னும் சட்டம் சில மாநிலங்களில் மட்டும் அதை அனுமதித்து ஒழுங்கு படுத்துகிறதே?

தியாகத் தலைவி சின்னம்மா என்று இனி தைரியமாக பேசி வாக்கும் வாங்குவார்கள்.   தங்களுக்கும் படம் வைத்துக் கொள்வார்கள்? !!

ஊழல் ஒன்றும் தண்டிக்கப் படத் தக்க குற்றம் அல்ல அன்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.    அதை ஒழுங்கு படுத்துங்கள் என்று கோருவதை எதிர்பார்க்கலாம் .

மக்கள் நலத் திட்டங்களை அரசு செலவில் நிறைவேற்றினார் என்பது மட்டுமே ஊழல் குற்றங்களை  மறைத்து விடுமா?

ஓட்டுக்கு தேர்தலில் பணம் கொடுப்பதற்கு பதிலாக அரசு செலவில் பொருள்களாக கொடுத்து வாக்குகளை பெறும் முயற்சி என்பதில் என்ன சாதனை.?   எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கா?

அது அல்லாமல் இன்னும் பல சிறப்புகள் ஜெயலலிதாவிற்கு இருக்கலாம்.   எதுவாக இருந்தாலும் அவை உச்ச நீதிமன்றம் சொன்ன குற்றவாளி என்ற தீர்ப்பை நீக்குமா?

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் சமாதி , நினைவு இல்லம் , அரசு செலவில் பராமரிப்பு , அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க முயற்சிப்பது எல்லாம் தமிழர்கள் ஈனர்கள் என்றுதான் இனி வரலாறு சொல்லும் .

உயர்நீதி மன்றமும் அதன் பின் உச்ச நீதி மன்றமும் என்னதான்  சொல்லப் போகின்றன என்பதை அறிய நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால்  ஓம் பிரகாஷ்  சவுதாலா,   லாலு பிரசாத் யாதவ் , மதுகோடா போன்ற முதல்மந்திரிகள்    சிறை தண்டனை அனுபவித்து  வருகிறார்கள்.   அவர்களும் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான்.     அவர்களுக்கும் இனி அரசு மரியாதை செய்ய வேண்டாமா?

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் ஊழல் வழக்கில் கட்டுக் கட்டாக பணத்துடன் பிடிபட்டார்.      பாஜக வுக்குப் போய் சௌகரியமாக இருக்கிறார்.      அவர் மகன் இமாச்சல அரசின் அமைச்சராம்.        மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய்   டன் கணக்கில் தங்கத்துடனும் பல ஆயிரம் கோடி பணத்துடனும் பிடிபட்டார்    .    இப்போது அவர் எந்த சிறையில் இருக்கிறார்?     மேல்தட்டு மக்களுக்கு தனி நீதி  இன்னும் தொடருகிறதே?

எல்லாம் சரி.   தமிழ்நாட்டிற்கு   ஏற்பட்டிருக்கும்

இந்தக் களங்கம் எப்படி என்று தீரும்???!!!

 

This website uses cookies.