திருமாவளவன் கட்டபஞ்சாயத்து செய்கிறார் என்று பா ஜ க வின் மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை பேசியது மிகப் பெரிய தவறு.
ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா ? அதை வெளியிட்டுவிட்டு குற்றம் சுமத்தி இருந்தால் நியாயம் என்று சொல்லலாம்.
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற தைரியம் எப்படி வந்தது?
மெர்சல் படத்தில் வந்த ஜி எஸ் டி – டிஜிட்டல் மணி போன்ற வசனங்கள் உங்கள் தணிக்கை குழுவினரால் அனுமதிக்கப் பட்ட பிறகு நீங்கள் என்ன சூப்பர் தணிக்கை குழுவா?
கண்டனம் தெரிவித்திருக்கலாம் . தவறு என்று சொல்லி இருக்கலாம். அதற்காக சொத்தை அபகரிப்பவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவது அவருக்கு இப்போது அவமானத்தை தானே தந்திருக்கிறது .
யாகாவாராயினும் நா காக்க – தமிழிசை மறக்க கூடாத குறள்.
அதற்காக சிறுத்தைகள் பா ஜ க நடத்தும் செயற்குழுவிற்கே சென்று பிரச்னை செய்வோம் என்று கிளம்பினால் தமிழக அரசியல் நாகரிகம் பலியாவது நிச்சயம்.
திமிறும் அகம்பாவமும் அரசியலுக்கு ஆகவே ஆகாது.
This website uses cookies.