தினகரனுக்கு திருச்சியில் கூடிய கூட்டம்!!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தினகரன் திருச்சியில் ஒரு  பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்.

அதிமுக ஆட்சியாளர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு உருப்படியாக  எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , அனிதாவின் மரணம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தினகரன் நன்றாக  பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அனிதா தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.     அவர் மரணம் எல்லா சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளையும் பாதித்திருக்கிறது .       முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் , நாடார் , முத்தரையர் என்று சாதி வித்தியாசம் பாராமல்  அனிதாவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வருவது சாதி ஒழிப்பில் மாணவர்கள் நினைத்தால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது .

அது மட்டும் அல்ல.     இ பி எஸ் -ஓ பி எஸ்  இவர்களை இணைத்தால் போதும் இவர்களை வைத்து மிரட்டி பாதி இடங்களை வாங்கி கூட்டு வைத்து தமிழகத்தில் கால் ஊன்றி  விடலாம் என்ற ம் பா ஜ க வின் கனவு தினகரனால் சிதைக்கப் பட்டு விட்டது.

அ தி மு க வில் ஒரு பலமான நிர்வாகிகளை கொண்ட ஒரு கட்டமைப்பை தினகரன் உருவாக்கி விட்டார்.

இனி இவர்களை தவிர்த்து அ தி  மு  க என்ற கட்சி வலுவுடன் இயங்குவது கடினம்.

எப்படியோ பா ஜ  க வின் கனவு தகர்ந்தால் நல்லதுதானே!