ரஜினியின் பித்தலாட்ட அரசியல் அம்பலம் ஆகி யிருக்கிறது.
பெரியார் சிலையை உடைத்ததை பற்றி கேட்ட போது அது காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்து விட்டு கிளம்பி விட்டார்.
பிரச்சினை கிளம்பி தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது உடனே விமர்சிக்க அவருக்கு நேரமில்லை.
இரண்டு நாள் கழித்து விமர்சிக்கும் போது கூட அதை தூண்டிவிட்ட எச் ராஜாவை ஏன் கண்டிக்க வில்லை.? ராஜா பேசாமல் அவன் உடைத்து விட்டானா? யார் உண்மைக் குற்றவாளி ?
கமல் என்னவென்றால் எல்லா சிலைகளையும் அகற்றினால் இதையும் பரிசீலிப்போம் என்றார். உன் உள் ஆசையை வெளிப் படுத்துகிறாய் அப்படித்தானே?
அதேபோல் ரஜினியும் உடைப்போம் என்று சொன்னவரை விமர்சிக்காமல் உடைத் தவரை மட்டும் விமர்சித்து விட்டு கிளம்பி விட்டார்.
எம்ஜியார் சிலை திறப்பின் போது ரஜினி பேசிய அனைத்தும் அபத்தம்.
நாட்டு பிரச்னைகளை பற்றி ஏதாவது பேசுவார் என்று பார்த்தால் அவருக்கும் எம்ஜியாருக்கும் இருந்த நெருக்கம் பற்றி பேசுகிறார். அதில் யாருக்கு என்ன பயன்? எம்ஜியார் ரசிகர்களை இழுக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று சொல்லி விட்டு ஒரு சினிமா சிரிப்பை மேடையில் உதிர்க்கிறார். இது என்ன படப் பிடிப்பா?
தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும் என்ற அரிய கண்டுபிடிப்பை எரிச்சலூட்டும் வகையில் உளறுகிறார்.
தமிழனுக்கு எல்லா வளங்களையும் தந்து அவன் மொழியை ஒழிக்க நினைக்கும் கூட்டம் தான் இப்படி எல்லாம் பேசும்.
அந்தக் கூட்டத்தை சேர்ந்தவன் நான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் ரஜினி.
ஏனென்றால் அவர் தமிழர் இல்லையே? நான் பச்சைத் தமிழன் என்று சொன்ன ரஜினி தன் அடுத்த நகர்வுகளில் தமிழர்களின் உணர்வுகளை வெளிக்காட்ட வில்லையே?
தமிழின் தனித் தன்மையை கட்டிக் காப்போம் என்று தமிழர்கள் சூளுரைத்து உழைத்துக் கொண்டிருக்கையில் அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு சகல வசதிகளையும் செய்து தருகிறோம் எல்லாரும் ஆங்கிலம் இந்தி மட்டும் படியுங்கள் பேசுங்கள் என்று ஒருவன் சொன்னால் அவனைப் பற்றி என்ன சொல்லுவோம்.?
அந்தப் பட்டியலில் இருக்கிறார் ரஜினி. வீட்டில் ஆங்கிலத்தில் பேசி திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அதாவது வீட்டில் தமிழில் பேசுவது தேவையில்லை. அப்படித்தானே ?
யாருடைய ஏஜெண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கு சான்றிதழ் வழங்கினால் ரஜினி யாருடைய ஏஜெண்டு என்பதற்கு சான்றிதழ் வேண்டுமா என்ன?
தமிழர்கள் சந்திக்கும் ஒரு பிரச்னை பற்றியாவது விளக்கமாக தனது கருத்தை ரஜினி பிரதிபலித்திருக்கிறாரா?
மண்டையில் இருந்தால்தானே வெளியில் வரும். எனவே வெற்றிடம் அங்கே இருக்கிறது ரஜினி. அதை நிரப்பி விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வாருங்கள்.
எம்ஜியார் செய்ததை இவர் செய்வாராம். அவர் எத்தனை வருடங்கள் அரசியலில் கழித்தவர். அதில் நூறில் ஒரு பங்கு இவர் செய்திருப்பாரா?
ஸ்டாலின், எடப்பாடி, ஓ பி எஸ், தினகரன், வைகோ, முத்தரசன் ,பாலகிருஷ்ணன் , திருமாவளவன் , சீமான், வாசன், திருநாவுக்கரசர், தமிழிசை, எல்லாருமே ஜீரோக்கள். இவர் ஒருவரே ஹீரோ.
இதுவரை எதிரிகளே இல்லாத ஹீரோ வாக இருந்த ரஜினி இப்படியா எல்லாருடைய வெறுப்பையும் சம்பாதிப்பது?
இமயமலையில் இருக்கும் பாபா கூட இவரை மன்னிக்க மாட்டார். பற்றற்ற பாபா பக்தர் என்று ரஜினிக்கு கிடைத்த மரியாதை இனிகிடைக்காது.
ஏதோ ஒரு கட்டத்தில் கமலும் இவரும் பா ஜ க வினால் ஒன்றிணைக்கப் படுவார்கள். அப்போது உங்கள் சுய ரூபம் வெளிப்பட்டே தீரும்.
எம்ஜியார் ஜானகி என்ற பார்ப்பனரால் வளைக்கப் பட்டார். ரஜினி லதாவால் வளைக்கப் பட்டார். மறைமுகமான இலக்கு , இருவரும் பார்ப்பநீயத்துகு எதிராக இயங்க மாட்டார்கள் அல்லவா?
ரஜினியின் மண்டையில் இருக்கும் வெற்றிடம் இனி ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டே இருக்கும்.
படத்தை ஓட வைப்பவர்கள் என்பதால் தானே இந்த இருவருக்கும் மரியாதை. அது அவர்களுடைய கலைத்திறமைக்கு நாம் கொடுத்த அங்கீகாரம். அதை வைத்து இவர்கள் இப்போது நம்மை விலை பேசுகிறார்கள்.
தமிழன் ஏமாந்தவன் இல்லை என்பதை இந்த இருவருக்கும் எப்படி உணர்த்துவது என்பதை தமிழ் சமூகம் சிந்திக்கட்டும்.