பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி முப்பது லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.
துணை வேந்தர் நியமனங்களில் கோடிகளில் லஞ்சம் கொடுத்து பதவி பெருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனாலும் யாரும் இதை தடுத்து நிறுத்த முனைந்ததில்லை. ஏன்? எல்லாருக்கும் இதில் பங்கு இருந்திருக்கிறது.
இத்தனை கோடி லஞ்சம் கொடுத்து வந்தவன் எந்த நம்பிக்கையில் கொடுக்கிறான்? அதை விட பல மடங்கு சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே?
அதை நிறுத்த என்ன செய்திருக்கிறார்கள்.?
துணைவேந்தர் களுக்கு இருக்கும் நியமன அதிகாரம் தான் இதற்கு அடிப்படை. தமிழ் நாட்டில் இருக்கும் 19 அரசு பல்கலை கழகங்களிலும் இதே நிலவரம்தான்.
பதவி நியமனம், பணி இட மாறுதல் , போன்றவற்றில் ஒவ்வொரு காரியத்திற்கும் லட்சங்களில் பேசப்படும் பேரம்தான் ஊற்று .
அனைத்திலும் வெளிப்படையான நடைமுறை அமுலில் இருந்தால் இந்த பேரத்திற் கெல்லாம் தேவை இருக்காதே?
ஆக இந்த ஊழல் என்பது எல்லா மட்டத்திலும் நிலை பெற்றிருக்கிறது.
இந்த ஊழல் ஒருமட்டத்தில் மட்டும் நிலை பெற்றிருக்க முடியாது.
அமைச்சரவைக்கு இதில் எந்த பங்கும் இல்லையா? அமைச்சருக்கு என்ன பொறுப்பு? செயலாளர் தரும் வழிகாட்டுதல் களையும் மீறி துணை வேந்தர் செயல் பட்டிருக்கிறார் என்றால் அதில் யார் யாருக்கு பங்கு இருக்கிறது. ? கல்வித்துறை செயலாளர் தான் இதில் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதில் முழுமையான விசாரணை இல்லாமல் ஒரு துணை வேந்தர் மீது மட்டும் நடவடிக்கை என்றால் அதில் எந்த அர்த்தமும் இல்லை.
எந்த பல்கலையிலும் இனி இத்தகைய ஊழல் நடை பெற கூடாது.
அதற்கான வழிமுறைகளை உடனடியாக வகுப்பதுதான் உடனடி தேவையே தவிர ஒரு குற்றவாளியை மட்டும் தண்டிப்பது அல்ல.
கல்வித்துறையில் நிலவும் இந்த ஊழல் ஒழிக்கப் படும்வரை எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது.