இந்தியர் என்பதை மறுக்க மாட்டோம்! திராவிடத் தமிழர் என்பதை மறக்கவும் மாட்டோம்.
இதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் இந்தியத்தில் தமிழனை அமிழ்ந்து போகச் செய்ய சூழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது நடைமுறையில் இருந்தால் இந்த பிரச்னை எழ வாய்ப்பே இல்லை.
மாநில உரிமைகளை சிதைத்து மத்தியில் அதிகாரங்களை குவித்து ஒற்றை உரிமை அரசாக , Unitary state in place of a Federal state, மாற்ற நடைபெறும் முயற்சிகள் தான் இந்த முழக்கத்துக்கு காரணிகளாக அமைகின்றன.
வெறும் 73 ஆண்டுகளாகத்தான் நாம் இந்தியர்.
அதற்கு முன் 250 ஆண்டுகளாக நாம் கிழக்கிந்திய கம்பெனியாலும் பிரிட்டிஷ் அரசாளும் ஆளப் பட்டு வந்தோம்.
அதற்கு முன் 10000 ஆண்டுகளாக நாம் திராவிடத் தமிழராகத்தான் வாழ்ந்தோம்.
வரலாற்றை மறப்பவன் மனிதனாக வாழ முடியாது.
மாக்களாக மந்தை போல் வேண்டுமானால் வாழலாம்.
மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள் பட்டியலை மறு பரிசீலனை
செய்ய வேண்டிய நேரம் இது.