ஜெயலலிதா மரணத்தில் மர்மம் புதிய பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார்.
ஜெயலலிதாவின் கை ரேகைகளில் ரேகைகளை காணோம் வெறும் புள்ளிகளாக இருக்கின்றன என்று மருத்துவர் சரவணன் குற்றம் சாட்டி ஜெயிலில் வைத்த ரேகை யை ஒப்பிட முயன்றபோது உச்ச நீதி மன்றம் தடை விதிக்கிறது. இறந்தவர் ரேகைகளில் தான் ரேகை இருக்காது என்கிறார்கள்.
அரசு அமைத்த மருத்துவர் குழு ஐந்து பேர். அவர்கள் பார்த்தார்களா இல்லையா? பார்க்க வில்லை என்று இப்போது அவர்கள் சொன்னால் அவர்களுக்கு என்ன தண்டணை?
விசாரணை கமிஷன் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து விடும் என்று எதிர் பார்க்க முடியாது.
ஆனால் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியும்.
யார் யார் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்ட முடியும்.
அதன் பிறகு குற்ற விசாரணை நடந்து குற்றவாளிகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்து அதன் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.
அதற்காக நாம் கமிஷனின் அறிக்கைகாக காத்திருக்க வேண்டியதுதான்.
அதற்குள் அப்போல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டி இன்று அளித்திருக்கும் பேட்டி அதிர்ச்சி தரக் கூடியது.
” ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவ மனைக்கு கொண்டு வந்தார்கள். அன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டிருந்தோம் . மக்கள் அச்சப் படக்கூடாது என்பதற்காகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்க வில்லை ” இதுதான் ரெட்டியின் பேட்டி.
அப்படி செய்வதற்கு எந்த மருத்துவ மனை நிர்வாகிக்காவது உரிமை இருக்கிறதா?
சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. அரசிடம் உண்மையை கூறி அவர்கள் சொல்லியபடி உண்மையை மறைத்தாரா? அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.
அவரிடம் உண்மையை சொன்னாரா இல்லையா?
இவரும் சசிகலா சொல்லித்தான் அப்படி நடந்து கொண்டோம் என்று சொல்லப் போகிறாரா?
இன்னும் எத்தனை மருத்துவர்கள் தான் அப்படி சொல்லப் போகிறார்கள்.?
வெளிநாட்டு மருத்துவர்களும் ஏய்ம்ஸ் மருத்துவர்களும் என்ன சொல்லப் போகிறார்கள்?
மருத்துவர்கள் பொய் சொன்னால் தண்டனை இல்லையா?
உண்மை தெரிந்தே ஆக வேண்டும்.
This website uses cookies.