தமிழக அரசியல்

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற எச் ராஜா மீது அடிமைகளின் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?

Share

பார்ப்பனர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

ஏறி மிதிப்பார்கள்.  எதிரிகளை அழிக்க முயற்சிப்பார்கள்.

அதைத்தான் எச் ராஜா செய்தார்.   வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி கிடைத்தவுடன் திரிபுராவில்  லெனின் சிலையை தகர்த்தார்கள்.      இ கம்யுனிஸ்டுகளை தாக்கினார்கள்.   கலவரங்களை உருவாக்கினார்கள்.    25   ஆண்டுக்கால இடது சாரி ஆட்சியை அகற்றிய வெறி .     ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் வெறியாட்டம் ஆடினார்கள்.

உ பி யில் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டது.   கலவரம் உருவானது.

இங்கே இருக்கும் ராஜாவுக்கும் ஒரு நப்பாசை.     நாமும் இங்கே திராவிட ஆட்சியை தகர்க்க முடியாதா?

அங்கே லெனின் சிலை.   இங்கே பெரியார் சிலை என்று செய்தி போட்டு கலவரத்தை உருவாக்கினார்.

தமிழாக்கம் எங்கும் போராட்டம் வெடித்தது. ராஜாவின் கொடும்பாவிகள் எரிக்கப் பட்டன.

பா ஜ க விலேயே உட்கட்சி மோதல்கள் வெளிவந்தன.    தமிழிசையும் பொன் ராதாகிருஷ்ணனும் அரசகுமாரும் இது  தவறு என்று சொல்ல அங்கே இருக்கும் மயிலை நாராயணன் கே டி ராகவன்  எஸ் ஆர் சேகர் போன்றவர்கள் ராஜாவை ஆதரிக்க அங்கேயும் பார்ப்பனர் பார்பனர் அல்லாதார் மோதல் வெளியே வந்தது.

போதாதற்கு கமல் ஹாசன் தனது பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தினார்.    கண்டிப்பதற்கு பதிலாக எல்லா சிலைகளையும் அப்புறப் படுத்த அவர் உறுதி அளித்தால் நாம் நம் முன்னோர் பெரியார் சிலையை அகற்றலாம் என்றார்.    ஏனென்றால் இருப்பது எல்லாம் பெரியார் அண்ணா, எம்ஜியார், தேவர், அம்பேத்கார், காந்திஜி, காமராஜர்  சிலைகள் தானே.    எல்லாவற்றையும் இதை சாக்காக வைத்து அகற்றினால் நல்லதுதானே என்பது அவாள்களின் ஆசை.

ஒரு பெரியார் சிலை சேதப் படுத்தப் பட்டது.   அரசு  ஒரு  பா ஜ க நிர்வாகியை கைது செய்ய அவரை நீக்கினார் தமிழிசை.   தூண்டி விட்ட ராஜா மீது என்ன நடவடிக்கை?

அநேகமாக எல்லா கட்சிகளும் ராஜாவின் மீது நடவடிக்கை  கோரி அறிக்கை வெளியிட்டார்கள்.

ரஜினி இதுவரை வாய்  திறக்க வில்லை.    பா ஜ க எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களே?

கமலும் ரஜினியும் மத்திய அரசை இது வரை விமர்சிக்க முன்வராத காரணம் பற்றி தமிழர்களுக்கு தெரியாதா?

15  பார்ப்பனர்களின் பூனூல்களை அறுத்ததாக வழக்குகள் பதியப் பட்டன.  சிலர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

ஆக கலவரம் வெடித்து விட்டது.

ஆனால் முதல்வர் வாய் திறக்க வில்லை.   ஒ பி எஸ் வாய் திறக்க வில்லை.

பாஜகவின் செயலாளர் முரளிதர் ராவும் எச் ராஜா வை கண்டிக்க , வேறு வழியில்லாமல்  ராஜா தன் பதிவை நீக்கி விட்டு தனக்குத் தெரியாமல் பதிவிடப் பட்டது என்று யாரும் நம்ப இடமில்லாமல் விளக்கம் கொடுத்து ஒரு வருத்தத்தை பதிவு செய்தார்.

ஆனால் தமிழ் சமூகம் இந்த வருத்தத்தை ஒப்புக் கொள்ளும்  என்று தெரியவில்லை.

ஏனென்றால் போராட்டம் தொடர்கிறது.    தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை ?

வருத்தம் தெரிவித்து விட்டதால் அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார்களா?

இனிமேல் பெரியார் படத்தை அதிமுகவினர் பயன் படுத்த உரிமையில்லை.

நடந்தது  தற்செயல் அல்ல.    ஒத்திகை.

அவர்களிடம் அதிகாரம் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதன் ஒத்திகை.

சாதி ஒழிப்பை தன் லட்சியமாக கொண்டு  வாழ்ந்த பெரியாரை ஒரு சாதி வெறியர் என்று சொன்ன ராஜாவின் கட்சிதான் சாதி கட்டமைப்பை பயன் படுத்தி ஆட்சியை பிடிக்க சதி திட்டம் தீட்டுகிறது.

எதிர்வினை சட்ட பூர்வமாகவே நடந்திருக்கிறது.

வேறுவகையில்  பரவாமல் இருக்க தமிழக அரசுதான் அவர் மீது நடவடிக்கைஎடுத்து தடுக்க வேண்டும்.

This website uses cookies.