இருக்கும் ஒரு உறுப்பினரும் பாஜகவின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.
ரவிந்திரநாத் குமார் தன் பெயரை இனி வந்தேமாதரம் குமார் என்று மாற்றிக்கொள்ளலாம்.
அந்த அளவு தன் பாஜக பாசத்தை காட்டிவிட்டார்.
ஒவ்வொரு மசோதா வரும்போதும் தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டதில்லை.
முத்தலாக் மசோதாவில் மக்களவையில் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவிக்க நவநீதகிருஷ்ணன் மேலவையில் எதிர்ப்பு தெரிவிக்க ஒபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டி பாராளுமன்றம் வரை சென்று விட்டதை நாடு பார்த்தது.
எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என் கருத்து வேறு தன் கட்சி கருத்து வேறு என்று கூறி தனக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை காரணம் காட்டி மோடியிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறாரே தவிர திராவிட இயக்க உறுப்பினராகவே அவர் செயல்பட வில்லை.
ஏ சி சண்முகம் இருவர் கோஷ்டியிலும் இல்லாமல் தான் மோடி கட்சிதான் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஏ சி சண்முகம் போய் புதிதாக என்ன செய்து விட முடியும்.
ஏற்கெனெவே தன்னை மோடியின் செல்லபிள்ளை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு அடிமையை அனுப்புவதில் பயன் இல்லை என்று தீர்மானித்து 37 பேரோடு 38வது உறுப்பினராக சென்று உரிமைக்கு குரல் எழுப்புங்கள் என்று திமுக வேட்பாளரை மக்களவைக்கு வேலூர் தொகுதி மக்கள் அனுப்புவார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
இடையில் ஆளும்கட்சிப் பணம் தண்ணீராக பாய்கிறது என்கிறார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு விரும்புகிறவருக்கு முன்பு வாக்களிததைப் போலவே இப்போதும் வாக்களிப்பார்கள் .
This website uses cookies.