தமிழக அரசியல்

ஐ ஐ டி யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் சமஸ்க்ரித பாடல் பாடிய வெறிக்கு என்ன பெயர்?

Share

சென்னை ஐ ஐ டி யில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

அதில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் சமஸ்க்ரிததில் இருந்து மகா கணபதிம் பாடலை இரண்டு மாணவர்கள் பாடினார்கள்.

இப்படி தமிழை அவமதித்து விட்டு எந்த தவறும் நிகழவில்லை என்று நியாயப் படுத்தும் பணியில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி சொன்னதுதான் அகந்தையின் அடையாளம்.

முடிந்த வரை தமிழை தன் கட்டுபாட்டில் உள்ள நிறுவங்களில் அகற்றுவதை ஒரு கடமை யாகவே மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஒரு புறம் சமஸ்க்ரிததை விட தமிழ் தொன்மை மிக்கது என்று  புகழ் பாடும் மோடி மறுபுறம் தமிழை அவமதிக்கும் அழிக்கும் வேலையில் தொடர்கிறார்.

மாணவர்கள் தானாக முன்வந்து பாடினார்கலாம்.   ஏன் தமிழ் பாட்டை பாட மாணவர்கள் இல்லையா?

மத்திய அரசு அலுவலகங்களில் ஒரு மத சார்பற்ற அரசின் அலுவல்கள் மத சார்பற்றே இருக்க வேண்டும்.

மத்திய அரசு இந்தி சமஸ்கிருதத்தயும் திணிப்பதில் காட்டும் ஆர்வம் இந்திய ஒற்றுமைக்கு வைக்கும் உலை.

அனைத்து மாநிலங்களிலும் செயல்படும்  மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் தமிழ் நாட்டில் தமிழ் மதிக்கப் பட்டே ஆக வேண்டும்.

எல்லா மத்திய அரசு அலுவலகங் களிலும் நிர்வாகப் பொறுப்பில்  இருக்கும்  பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளும் திருந்தியாகவேண்டும்.

ஐ ஐ டி இயக்குனர் மன்னிப்புக் கோர வேண்டும்.   இனி இந்த முறைகேடு தொடராது என்ற உறுதி மொழி வேண்டும்.

This website uses cookies.