சமீப காலமாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் உலா வந்தது.
அதில் கமல்ஹாசன் பேசுவது போல் ஓர் வீடியோ. அவர் பேசுகிறார் “ஆம். நான் பணத்திற்காக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்தேன். கிறிஸ்தவ மீடியா சென்டரில் சேர்த்து அதை செய்தேன். என் மதத்தில் எந்த நம்பிக்கை வைத்திருந்தேனோ அதே நம்பிக்கையை கிறிஸ்தவ மதத்தின் மீதும் வைத்திருந்தேன்.”
அது உண்மையா என்பதை கமல்ஹாசன் தெளிவுபடுத்த வேண்டும். அவரது மூத்த சகோதரர் லண்டனில் இறந்தபோது அவர் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் அடக்கம் செய்யப் பட்டதாகவும் அந்த வீடியோ காட்டுகிறது. அதேபோல் அவரது அண்ணன் சாருஹாசனும் இந்து மத விரோத கருத்துக்களை பேசி எல்லாரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டது போல் பேசுகிறார்கள்.
பார்ப்பனர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவது ஒன்றும் புதிதல்ல.
ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் பெரும்பாலான பார்ப்பனர்கள் அங்கே அந்த நாட்டு கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்தவர்களாக மாறிக் கொள்வது வழக்கம். அதன் பின் அவர்கள் அந்த நாட்டு அரசியலிலே புகுந்து வெற்றி பெற்று சாதனை படைத்தது வருகிறார்கள்.
அரசியல் ஆசை கொண்ட எந்த பார்ப்பனரும் தன் அடையாளத்தை விடாப்பிடியாக வைத்துக் கொள்ளமாட்டான்.
அடையாளம் எல்லாம் மனதிற்குள் மட்டுமே இருக்கும்.
மற்றவரை வெல்ல வேண்டுமானால் அடையாளத்தை மாற்றிக் கொண்டால்தான் முடியும் என்றால் மாற்றிக கொள்வதில் என்ன தவறு என்று பார்ப்பனீயம் கேட்கும்.
கமலது தாக்குதல் திமுகவை நோக்கி அதிகமாக இருப்பதால் இந்த சந்தேகம்.
காசு கொடுக்காமல் பதினைந்து லட்சம் வாக்குகள் பெற்று விட்டதால் இவரது கட்சி நிலைபெற்று விடும் என்று சொல்ல முடியாது.
அரசியல் தனது பிழைப்பல்ல என்று கூறும் கமல் அடுத்து இந்தியன்2 நடிக்கப் போய்விடுவார்.
அவரை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள்?
நகர்ப்புறத்து பார்ப்பனர்களும் சூதறியா பிற வகுப்பு இளைஞர் களும் ஏதோ ஈர்ப்பில் இவரிடம் சென்றார்கள். புத்தி தெளிந்தபின் திரும்பி விடுவார்கள் பார்ப்பனர்கள் தவிர.
எந்த பிரச்னை பற்றியும் உறுதியான கொள்கை எதையும் சொல்லாத கமல் தமிழக அரசியலில் செல்வாக்கு பெறுவது அசிங்கம்.
கமல் மீது நமக்கு வெறுப்போ கோபமோ இல்லை. அவர் பார்ப்பனர் என்பதால் மட்டும் இந்த விமர்சனம் இல்லை.
நாத்திகன் என்று சொல்லிக்கொள்பவர் ஒரு மத பிரச்சாரகரா என்ற கேள்வி முக்கியம்தானே?
தமிழ் மொழி பாதுகாப்பு தமிழர் நலன் பாதுகாப்பு என்று குறிப்பிட்டு பேசக் கூட தயாராக இல்லாதவர் உண்மையில் யார் என்ற கேள்வி எழுவது நியாயமா இல்லையா?
This website uses cookies.