சென்னை உயர் நீதிமன்றம் பதினெட்டு எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தீர்ப்புக்கு என ஒதுக்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.
ஓ பி எஸ் உள்பட பத்து பேர் மீதும் திமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை மீதும் கூட இந்த தீர்ப்பில் தீர்ப்பு சொல்லப் பட வேண்டும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது அரசுக்கு எதிராக வாக்கு அளித்தவர்கள் அமைச்சர்கள் ஆக பவனி வருகிறார்கள்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் கொடுத்தவர்கள் தகுதி இழப்புக்கு ஆளாகி நிற்கிறார்கள்.
என்ன சட்டம் ! என்ன நியதி! எங்கே நீதி?
அந்த தீர்ப்பு வந்தால் பல முடிச்சுகள் அவிழ்க்கப் படும்.
இன்னும் மூன்று நாட்கள் தான் வேலை நாட்கள்.
கோடை விடுமுறை மே மாதம் கழிந்து ஜுன் மாதம் தான் மீண்டும் நீதி மன்றம் திறக்கும் என்றால் அது வரை தமிழக அரசும் அரசியலும் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இது நியாயமா?
எத்தனை குழப்பங்களுக்கு இந்த நீதிமன்ற தாமதம் வழி வகுக்கிறது.
தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வைத்து மக்கள் விவாதித்து முடிவெடுக்கட்டும். அதுவரை நீடிக்கும் குழப்பங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று நீதிமன்றம் அறியாதா?
யாரிடம் முறையிடுவது?
This website uses cookies.