கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் பா ஜ க காங்கிரஸ், பா ம க, கம்யுனிஸ்டு கட்சிகள் , முஸ்லிம் லீக் , போன்ற முற்றிலும் கருத்து வேறுபாடு உள்ள கட்சிகள் எல்லாம் கலந்து கொள்கின்றன.
இது ஒரு பண்பாடு . இதற்கு என்ன அரசியல் முக்கியத்துவம் ?
மாநில ரீதியில் தலைவர் என்ற முறையில் வேறு ஒரு ஊரில் தமிழிசை கலந்துகொள்கிறார்.
அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அமித்ஷா அழைக்கப் பட்டு அவரும் வர ஒப்புதல் தந்ததால் தான் அவர் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது.
வந்து சாதிக்கலாம் என்று தேதி கொடுத்திருக்கலாம் . பயன் இருக்காது என்று தெளிந்து வேறு யாரையாவது அனுப்பி வைக்கலாம்.
வழக்கம்போல , அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் என தெரிய வருவதாக சுப்ரமணிய சாமி ட்வீட் செய்கிறார்.
பா ஜ க அணிக்கு திமுக செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா ஜ க அனைத்து சித்து வேலைகளையும் அரங்கேற்றும்.
எதுவும் இங்கு எடுபடாது.
This website uses cookies.