தமிழக அரசியல்

முஸ்லிம்களை பிரிவினை கேட்க தூண்டுகிறதா பாஜக?!

Share

முஸ்லிம்கள் ஆசாதி கோஷம் எழுப்ப வேண்டும்  என்று பாஜக ஏன் விரும்புகிறது?

அப்போதுதான் இந்துக்கள்  முஸ்லிம்கள்  மீது கோபம் கொள்வார்கள் . அதை வைத்து இருவரும் எப்போதும் சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.  இந்துக்கள் வாக்குகளை வாங்கி ஆட்சிக் கட்டிலில் நிரந்தரமாக உட்காரலாம்.

ஆசாதி என்றால் விடுதலை.  யாரிடமிருந்து எதனிடம் இருந்து என்றெல்லாம் குழப்பம் அடையத்  தேவையில்லை.  ஜின்னா வழியில் ஆசாதி என்றால் பிரிவினை மூலம் விடுதலை என்று பொருள்.  அதாவது நாட்டுப்பிரிவினை.

முன்பே இந்து முஸ்லிம் அடிப்படையில்தானே நாடு பிளவுண்டது.  இரண்டாவது பிரிவினை என்றால் எந்த நிலத்தை பிரித்துக் கொள்வது?  பிரிவினை கோருவது தடை செய்யப் பட்டுள்ளது.  எனவே பிரிவினை கோரினால் அவர்கள் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே முஸ்லிம்கள் கோருவது  நாட்டுப் பிரிவினை அல்ல. அடக்கு முறையில்  இருந்து விடுதலை.

குடிஉரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் மோடி.

பின் எப்படித்தான் இந்த பிரச்னை முடிவுக்கு வரப் போகிறது?

போராட்டம் ஒயப்போவதாக தெரியவில்லை. அரசும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

என்னதான் முடிவு?  ஆறேழு மாநிலங்கள் குடிஉரிமை திருத்த  சட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அமுல்படுத்தப் போவதில்லை என்றும் தீர்மானம் போட்டுள்ளன.    அவர்களை கலைத்து விடுவீர்களா?  அங்கெல்லாம் இந்த சட்டத்தை எப்படி அமுல் படுத்துவீர்கள்.?

போராடும் முஸ்லிம்கள் எந்த முகாந்திரத்தில் போராட்டத்தை திரும்ப பெறுவார்கள்?  ஏதாவது உத்தரவாதத்தை மத்திய அரசு தந்தால் மட்டுமே இது சாத்தியம்.

நாட்டை பிரளயத்தில் ஆழ்த்தி  விட்ட  இந்த சட்டங்களை ஆதரித்து வாக்களித்த அதிமுக-பாமக இரண்டும்தான் இந்த சூழ்நிலை உருவாக காரணம்.

போராடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில்  யாராவது ஒருவர் கல் எறிந்தால் அதுதான் கலவரம் உருவாக காரணமாக இருக்கும்.

சட்டம் உருவாக வாக்களித்து விட்டு அதிமுக அரசு எப்படி இதை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்>?

எனவே இந்த பிரச்னை தீர மத்திய அரசு மனம் வைத்தால் தான் முடியும்? போராட்டம் தொடர்ந்தால் இந்த பிரச்னை தொடர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்றுதான் பொருள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

This website uses cookies.