எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது மோடிக்கு சேவகம் செய்வதில் யார் அதிகம் பெரியவர் என்ற போட்டி ?
குடி உரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
எல்லாம் மக்களை பிரித்து ஆளுகிறது, பாரபட்சம் காட்டுகிறது பிரிவினைக்கு வித்திடுகிறது என்று பல காரணங்களுக்கு ஆக எல்லா கட்சிகளும் பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சி பிரச்சாரம் ஆக சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் சில பெண்கள் தங்கள் வீட்டு முன் கோலங்கள் போட்டார்கள். அதில் குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இது எப்படி சட்ட ஒழுங்கை கெடுப்பதாய் அமையும் என்று தெரியவில்லை? .
அவர்களை காவல் துறை கைது செய்திருக்கிறது.
இதைவிட கொடுமை அமைச்சர் கடம்பூர் ராஜு இதை நியாயப்படுத்தி இருப்பது. சட்ட ஒழுங்க கெடுமாம்!
இன்றைக்கு ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம போட்டு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். போய் கைது செய்ய வேண்டியதுதானே?
புது போராட்ட வழியை அதிமுக ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதுதான் கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்வது.
காவல்துறையின் விசுவாசத்துக்கு எல்லையே இல்லையா?
This website uses cookies.