பயங்கரவாதிகளின் பயிற்சிக்களம் தமிழ்நாடு என்று பொன் ராதாகிருஷ்ணன் மிரட்டுவது ஏன் தெரியுமா?

அடிக்கடி பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நக்சலைட்டுகள் , மாவோயிஸ்டுகள் , பயங்கர வாதிகள்,  தமிழ் பெயரை சொல்லி பேசும் பிரிவினை வாத இயக்கங்கள் பல அமைப்புகளில் ஊடுருவி இருக்கின்றனர் என்று சொல்லி வருகிறார்.

தமிழக அரசு இதை மறுத்து வருகிறது .   ஜெயக்குமார் கூட அவர் ஏதோ விளம்பரத்துக்காக பேசுகிறார் என பதில் சொல்கிறார்.    ஒரு மத்திய அமைச்சர் விளம்பரத்துக்காகவா  பேசுவார்?

தமிழக அரசே மத்திய அரசின் அடிமை என்று குற்றம் சாட்டப் படுகிறது.

பெரும்பான்மை இல்லை.    மத்திய அரசு வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த அடிமைகளை கூட்டு சேர்த்து  கால் ஊன்ற முடியாதா என்பதே பா ஜ க வின் கணக்கு.

பின் எதற்கு இந்த பயங்கரவாத பூச்சாண்டி?

தேர்தலுக்கு முன் அவசரநிலை கொண்டுவரலாமா  என திட்டமிடுகிறதா மத்திய அரசு?

அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்த திட்டமா?

இந்த ஒன்றில் எதை அமுல் படுத்தவும் இந்த குற்றச்சாட்டு பயன்படும் என்று அவர் நம்புகிறார் என்றுதான் பொருள்.

இல்லையென்றால் மாநில அரசு இல்லை என்னும் ஒன்றை  இவர் இருக்கறது என்று ஏன் சொல்ல வேண்டும்?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தவுடன் தீவிரவாதிகள் ஊடுருவல் என்றீர்கள்.   ஒரு தீவிரவாதியை கூட அடையாளம் காட்ட அரசால முடியவில்லை?

குண்டடி பட்டவர்களுக்கு இருபது லட்சம் நிவாரணம் அளித்தால் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று தானே பொருள்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கர வாதிகள் ஊடுறுவினார்கள் என்று போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வேலையை பா ஜ க கைவிட வேண்டும்.

அரசியல் இலக்கை வைத்து பொய் குற்றச்சாட்டு வைப்பதும் குற்றமே.

அதை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு பொன். ராதாகிருஷ்ணன் செய்யக் கூடாது.

ஆதாரம் இருந்தால் அரசிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கட்டும் .

அதை விடுத்து வேற்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் உங்களிடம் வைத்திருக்கும் மரியாதை போயே போய்விடும்.