சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்யச் சென்ற நடிகர் மன்சூர் அலி கான் ‘ மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழிச்சாலையை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வேன் ‘ என்று ஆவேசமாக பேசியதால் கைது செய்ய பட்டு 13 நாள் காவலில் சிறையில் இருக்கிறார்.
அப்படி பேசினாரா எண்ணம் இருந்ததா வெறும் ஆவேசத்தில் பேசியதா என்பதெல்லாம் விசாரணைக்கு உரியது. எனவே அவரது கைதை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.
ஒன்று மட்டும் கேட்டார்கள். எஸ் வி சேகரை மட்டும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
இன்று எஸ் வி சேகர் நீதிமன்ற அழைப்பாணை ப்படி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் . பிணை கிடைப்பதில் சலுகை காட்டக் கூடும்.
மன்சூர் அல் கானைப் பொறுத்த வரை உணர்ச்சி வசப் படுபவர். அதற்காக வார்த்தைகளை பொறுப்பின்றி உதிர்க்கக் கூடாது.
ஆனால் பியுஸ் மானுசைப் பொறுத்த வரையில் அவர் மக்களை திரட்டி போராடுபவர் மட்டும் தான். வன்முறைக்கு வித்திடுபவர் அல்ல. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?
மக்களை திரட்டுவது குற்றமா? கருத்து சுதந்திரம் பறிக்கப் படுவது நல்லதல்ல.
அதேபோல் கல்லூரி மாணவி வளர்மதியும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
இதை நீதிமன்றம் தட்டிக் கேட்காதா?
அரச பயங்கரவாதம் என்பது இதுதானோ?
மக்கள் போராட்டங்களை அடக்கும் எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை.