தமிழக அரசியல்

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த உதவி பேராசிரியர் நிர்மலாதேவி?!

Share

மேலோட்டமாக பார்க்கும்போது தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு உதவி பேராசிரியர் நிர்மலாதேவி இழுக்க முயற்சித்த செய்தி ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் சம்பத்தப் பட்ட குற்றமாக தோன்றினாலும் ஆராய்ந்தால் இதில் ஓர் பெரிய கூட்டமே பல காலமாக இந்த இழி தொழிலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வரும்.

எனவே குற்றவாளி அவர் மட்டுமல்ல.  பின்னால் இருந்து இயக்கிய அந்த மிருகங்கள் யார் யார்?

கவர்னர் தாத்தா இல்லை என்று அவர் சொல்லும்போது அதற்கு இரண்டு பொருள்.    கவர்னர் தாத்தாவை நான் சொல்லவில்லை என்றும் கவர்னர் ஒன்றும் தாத்தா இல்லை இளைஞர் தான் என்றும் பொருள் கொள்ளலாம்.

கலெக்டர், ரெஜிஸ்ட்ரார் எல்லாம் எவ்வளவு பெரியவர்கள் தெரியுமா என்னும்போது அவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப் படுகிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் கல்வி நிலையங்களில் பெண்கள் எப்படி சீரழிக்கப் படும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன என்ற அச்சமூட்டும் உண்மை நிரூபணம் ஆகியிருக்கிறது.

பந்வாரிலால் புரோஹித் இனியும் பதவியில் நீடிக்க வேண்டுமா?

கவர்னர் மீது சந்தேக குற்றச்சாட்டு எழுப்ப பட்டவுடன் தான் சம்பந்தப் படாமல் விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தால் நம்பலாம்.

துணை வேந்தர் நியமித்த ஐந்து நபர் விசாரணை குழுவை கலைத்து தனி நபர் விசாரணை என்கிறார்.   பெண் சம்பந்தப் பட்ட குற்றச்சாட்டு ஒரு பெண் விசாரணையில் இருக்க வேண்டும் என்றால் அதை அந்த தனி நபர் பார்த்துக் கொள்வார் என்கிறார்.

தான் தோன்றித் தனமாக மூன்று துணை வேந்தர்களை வேற்று மாநிலங்களில் இருந்து நியமித்த திமிர் ; அதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அடிமை அரசு; வேறென்ன வேண்டும் அவருக்கு ?

கவர்னர் ஆட்சி நடக்கிறது என்றே மக்கள் கருதினாலும் கவலை இல்லை.

கொடுமை ;     குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லி விளக்கம் அளித்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் செய்தியாளரின் கன்னத்தில் தடவுகிறார்.   அவர் ஆட்சேபித்து தகவல் தந்தவுடன் மன்னிப்பு கோருகிறார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகிவிட்டதா?

சிபிசி ஐடி விசாரணை நடக்கிறது.   போதாது.   சிபி  ஐ விசாரணை வேண்டும்.   ஏன் என்றால் மாநில அதிகாரிகளே குற்றக் கூண்டில் நிற்கின்றனர்.   மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட விசாரணை உண்மையை வெளிக்கொண்டு வராது.

அப்போது மட்டுமே நிர்மலாதேவியை இதுவரை இயக்கியவர்கள் யார் யார் என்ற உண்மைகள் வெளிவரும்.

ஆளுநர் தானாக போக போகிறாரா ?   அல்லது மத்திய அரசு உத்தரவிட்டு அவமானப் பட்டு  போகப் போகிறாரா?

இவ்வளவு நடக்கிறதே!   அதிகாரத்தில் இருக்கும் இருவர் வாய் திறக்க மறுக்கிறார்களே?

எவ்வளவுதான் தமிழர்களை அவமானப் படுத்துவீர்கள்?

This website uses cookies.