தமிழக அரசியல்

உள்ளாட்சி தேர்தல் நடத்த அஞ்சுவது ஆளும்கட்சியா திமுகவா?

Share

குறை இல்லாமல் சட்டப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுகவின் குற்றம் என்றால் அந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை அங்கீகரித்து தடை கொடுத்த நீதிமன்றத்தை என்ன சொல்வது?

தேர்தலை நடத்த நீதிமன்றத்தை நாடியது திமுக. நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தண்டிக்க மனு போட்டது திமுக.

டிசம்பர் மாதம் 13 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதி மன்றம்.

அதற்குள் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி அதில் மறுவரையறை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி தேர்தலை நடத்த சிக்கலை ஏற்படுத்தியது ஆளும்கட்சி. கேட்டால் அதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் தொடர்பு இல்லை   என்கிறார்கள்.

அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா?

எந்த குறைகள் இருந்தாலும் அவைகளுடன் கூடவே தேர்தலை நடத்துங்கள் என்று கூறுமா?

கூறினால் அப்படியே  தேர்தலை நடத்தட்டுமே?

பொங்கல் வர இன்னும் ஒன்றரை  மாதம் இருக்கும்போதே அரிசி அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்ததன் பின்னணி தேர்தல் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களா வாக்காளர்கள்?

பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வென்றவர்களுக்கு பயம் என்று ஆளும்கட்சி கூறுகிறது. இரண்டு இடைத்தேர்தல்களில் வென்று விட்டதால் அவர்களுக்கு தைரியம் வந்து விட்டதா? கூட்டணி கட்சிகள் மிரட்டிக் கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருந்து கொண்டு சமாளிக்கிறது அதிமுக அரசு.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல் பல பணிகள் தேங்கி கிடப்பது உண்மைதான்.      உள்ளாட்சி நிதியை மத்திய அரசிடமும் இருந்து பெற முடியவில்லை.

உச்ச நீதிமன்றம் மட்டுமே தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தர விட முடியும்.

தேர்தல் வரட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

அஞ்சியது யார் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லட்டுமே?

This website uses cookies.