பொதுவாக விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்க கூடாதுதான்.
காவிரி தண்ணீர் பிரச்னை மக்களில் உயிர் பிரச்னை. விவசாயிகளின் பிரச்னை மட்டும் அல்ல. அதனால் தான் அனைத்து தரப்பு மக்களும் போராடுகிறார்கள்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என்பதே பெரும்பான்மை முடிவு.
அது மட்டும் அல்ல. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து பல் கலை கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வது; நீட் தேர்வில் விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை குடி அரசு தலைவருக்கு அனுப்பாமல் மோசடி செய்து வருவது; மீனவர்களை மீன் பிடி தொழிலில் இருந்து விரட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வது ; விவசாய தொழிலில் இருந்து விவசாயிகளை விரட்ட டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவித்தது என்று தமிழர் விரோத அரசாகவே மோடியின் மத்திய அரசு பார்க்கப் படுகிறது.
வருமான வரித் துறையை வைத்து இரண்டு கைத்தடிகளை வைத்து மறைமுகமாக தமிழகத்தில் மோடிதான் ஆட்சி செய்து வருகிறார்.
வரும் ஒன்பதாம் தேதி உச்ச நீதி மன்றம் மேலாண்மை ஆணையம் அமைக்குமா இல்லை வழக்கம் போல் போக்கு காட்டுமா என்பது தெரிய வரும்.
இன்னிலையில் சென்னையில் ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யுமா செய்யாதா?
விளையாடுங்கள்; அமைதி நிலவும் மாநிலங்களில்; வாழ்த்துகிறோம்!!!
நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்! இங்கே உங்களுக்கு விளையாட்டு ஒரு கேடா???? எங்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள்?!
மீறி நடத்தப் பட்டால்?? மைதானம் காலியாக இருக்க வேண்டும்.!!!
This website uses cookies.