இத்தனை ஆண்டுகளாக வழக்கு நடத்தியவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிறார் கமல் ஹாசன் .
ஐம்பது ஆண்டு பிரச்னையை பல காலம் பேசித்தீராமல் கடைசி ;முயற்சியாகத்தான் நடுவர் மன்றம் அமைத்து வழக்கு நடத்தி ஏதோ ஒரு வழியாக இறுதி தீர்ப்பு வந்து அதுவும் பல இழப்பு களை சந்தித்து வாரியம் கேட்டுகிடைக்காமல் ஆணையம் வந்து அதுவும் பெயரளவிலா அமுலுக்கு வருமா என்பது தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு தீர்ப்பு அமுலுக்கு வரும் என்பது ஒன்றே நல்ல சேதி.
என்றும் கர்நாடகத்துக்கு தண்ணீர் கூடாது என்பது தமிழகத்தின் நிலை அல்ல. அவர்கள்தான் தீர்ப்பை அமுல் படுத்த மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.
அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். தீர்ப்பு அமுல் படுத்தப் படும் என்ற உறுதி ஒன்றே.
இப்போது போய் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கமலும் பேசுகிறார். அதை குமாரசாமியும் ஒத்து ஊதுகிறார். ரஜினியும் அதை ஆமோதிக்கிறார்.
தீர்ப்பை என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.?
அப்படியே விட்டு விடலாமா? என்றென்றும் கையேந்தி நிற்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கருத்தா?
தீர்ப்பை எப்படி அமுல் படுத்த வேண்டும் என்பதை மட்டும் பேசலாம் என்றாவது சொல்கிறார்களா?
ஏதோ தான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்று கமலஹாசன் நிரூபிக்க விரும்பினால் உருப்படியாக ஏதாவது செய்யட்டும்.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பி , குட்டையை குழப்பும் வீண் வேலையை கமலஹாசன் நிறுத்திக் கொள்ளட்டும்.
This website uses cookies.