கன்னடத்துக்காரர்கள் மெர்சல் படத்தை வெளியிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தி தடுத்திருகிறார்கள் .
அந்த படத்தில் கர்நாடகத்துக்கு எதிராக என்ன இருக்கிறது?
தமிழன் ஆளப்போறான் என்ற பாடலா? தமிழ் உணர்வை வலியுறுத்தும் காட்சிகளா?
விஜய், கார்த்தி , சூர்யா , அஜித் , ரஜினி போன்ற தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதை தடுக்கும் நோக்கமா?
எதுவாக இருந்தாலும் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த தடையை தடுக்க தவறிய குற்றத்தை இழைத்திருக்கிறது .
கலைக்கு மொழி தடை இல்லை என்கிறார்கள். அது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தானா?
தமிழ் படங்களில் தமிழ் கதாநாயகர்கள் கதா நாயகிகள் ஏன் முக்கியத்துவம் பெறுவதில்லை.?
பெரும்பாலும் வேற்று மொழி மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்கிறார்கள்.
ஏன் தமிழர்களுக்கு நடிக்கும் தகுதியும் திறமையும் இல்லை என்கிறார்களா? அல்லது தமிழர்கள் சம்பாதிக்க உரிமை அற்றவர்கள் என்கிறார்களா?
தமிழ் ரசிகனின் பணம் வேற்று மொழி நடிகர்களுக்கு அல்லது கலைஞர் களுக்கு மட்டுமே போக வேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுகிறார்களோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.
இந்த சிந்தனையை தூண்டி விட்டவர்கள் கன்னடர்கள். நன்றி!
This website uses cookies.