பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி ரூபாய் 415 கோடி செலவில் பணிகள் முடிவடைந்து கிலோமீட்டர் குறிக்கும் மைல் கல் நடப்பட்டுள்ளது.
அதில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேலே இந்தி மொழியில் பெரிதாகவும் கீழே தமிழில் சிறியதாகவும் எழுதப் பட்டுள்ளது மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி விட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை என்றால் அங்கே இந்திக்குத்தான் முதல் இடமா?
அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினால் என்ன?
இங்கே உள்ளவர்களுக்கு இந்தி புரியாது. அவர்களிடம் இந்தியில்தான் எழுதுவோம் என்று முரண்டு பிடிப்பது எதற்காக?
செலவு செய்வது மத்திய அரசு என்றால் அங்கே மாநில மொழிகளுக்கு இடம் கிடையாதா?
மத்திய அரசின் நிதி மாநிலங்கள் தருபவைதானே?
உள்ளுரிலேயே உள்ளூர் மொழிக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் வேறு எங்கேதான் உள்ளூர் மொழிக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?
மொழியை புகுத்தி ஒற்றுமைக்கு உலை வைக்காதீர்?