டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் சுந்தரம் ஐயங்காரின் பேரன்.
பல ஆலயப் பணிகளின் தர்மகர்த்தா. அவரே சொல்லுகிறபடி ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளுக்கு மட்டும் தன் சொந்த செலவாக 25 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். அவர்தான் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர்.
அவர் மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினராக இருந்த காலத்தில் சுமார் எழுபது லட்ச ரூபாய் கோவிலுக்கு செலவு செய்திருக்கிறார்.
ஆனால் அந்த கோவிலில் இருந்த ஒரு மயில் சிலை ஒன்று சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம் .
அதன் வாயில் ஒரு இலை இருக்குமாம். அது பழுது அடைந்தது என்று புதுப்பிக்க முடிவு செய்து புதிய சிலை ஒன்று செய்திருக்கிறார்கள். அந்த புதிய சிலையின் வாயில் பாம்பு இருந்திருக்கிறது. எனவே அது பழைய சிலை அல்ல என்ற புகார் எழுந்து விசாரணைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
அந்த புகார் தான் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பதிவாகி பின்னர் சிலை கடத்தல் பிரிவுக்கு மாற்றி இருக்கிறார்கள். அதில் வேணு சீனிவாசன் பெயரும் இருக்கிறதாம்.
தான் கபாலீஸ்வரர் கோவில் பக்தன் . தான் குற்றமற்றவன் எனும் சீனிவாசன் செய்திருக்கும் காரியம்தான் நம்மை திகைக்க வைக்கிறது.
இதுவரையில் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப் பட்டதில்லை.
அவர் குற்றம் செய்திருப்பார் என்று நாமும் நினைக்க வில்லை.
ஆனால் அவர் எதற்காக முன் ஜாமீன் கோர வேண்டும் என்பதுதான் நமக்கு புரியவில்லை.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்கட்டுமே! விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டால் தானே நடவடிக்கை இருக்கும். நிரூபிக்க முகாந்திரம் இல்லை என்றால் ஏன் அவர் கைது பற்றி அச்சப் பட வேண்டும்?
அதுதான் நமக்கு புரியவில்லை.
பொன் மாணிக்கவேல் விசாரிக்கிறார் என்றால் பலருக்கு பயம் வந்து விடுகிறது. அதில் வேணு சீனிவாசனும் சேருவது வியப்பு.
அவர்க்கு ஆதரவாக வைகோ அறிக்கை கொடுத்திருக்கிறார்.
குற்றம் பற்றியோ விசாரணை பற்றியோ முன்கூட்டியே எதையும் சொல்வதற்கில்லை.
ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பாமரர்கள் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பது தான் நமது விருப்பம்.
விசாரணை விரைவில் முடிவடைந்து உண்மை வெளிப்படும் என நம்புவோம்.
This website uses cookies.