ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கருப்பணன் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் போதுமா. நாங்கள்தானே நிதி ஒதுக்க வேண்டும். திமுகவுக்கு நாங்கள் எப்படி நிதி ஒதுக்குவோம் என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.
அதிமுக அமைச்சர்கள் ஆளுக்காள் தாறுமாறாக பேசி வருகிறார்கள்.
இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் பழனிசாமி தடுமாறி வருவது தெரிகிறது.
அரசியல் சட்டபடி உறுதிமொழி எடுத்துக் கொண்ட அமைச்சர் அதை மீறலாமா?
நொய்யல் ஆற்றில் நுரை வந்ததற்கு பொதுமக்கள் பயன்படுத்திய சோப்பு தான் காரணம் என்றும் சாய ஆலைக்கழிவுகள் அல்ல என்றும் சொன்னவர் தான் இவர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்த மிரட்டல் பாதிக்கும் என்பதில் உண்மை இருக்கிறது. வெளிப்படையாக மிரட்டும் அளவு அதிமுக சென்று விட்டது.
மக்கள் மன்றத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அமைச்சர்கள் பேசியே கெடுத்துக் கொள்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல.