உலக அரசியல்

கோத்தபயவின் வெற்றி இந்தியாவின் தோல்வி?!

Share

 

கோத்தபயவின் வெற்றி இந்தியாவின் தோல்வி ?!

மீண்டும் ராஜபக்சேக்கள் இலங்கையில் ஆட்சியில் அமர்ந்து விட்டனர்.

இனி தமிழர் பிரச்னை நிரந்தரமாக கிடப்பில் போடப்படும்.

எல்லாருக்குமான அதிபராக கோத்தபய பணியாற்றுவார் என்று யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் கடந்த கால சிங்கள ஆட்சியாளர்களின் செயல்களை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

இனி அவர்கள்  சீனாவுக்கு வால் பிடிப்பார்கள். இந்தியாவுடன் பெயரளவுக்கு சுமுகமாக காட்டிக் கொண்டு சீனாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இந்திய அரசு என்று தமிழர்களின்  பிரச்னையில் உண்மையான அக்கறையை காட்டுகிறதோ அப்போதுதான் சிங்களர்கள் நம் வழிக்கு வருவார்கள்.

தொடர்ந்து இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிகொண்டே வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் அங்குள்ள தமிழர்களின் உரிமையை பறிப்பதற்குத்தான் இந்தியாவை பயன் படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அங்கே தமிழர்களுக்கு உறிமை கொடுத்தால் இந்தியாவின் தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டு க்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்பதே அவர்களின் பிரச்சாரமாக இருந்தது.

இந்திரா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காலத்தில் சிங்களர்கள் அடங்கித்தான் இருந்தார்கள்.

ராஜீவ் மரணம் இந்தியாவை தமிழர் பிரச்னை பற்றி கண்ட கொள்ளாமல் இருக்கச் செய்து விட்டது என்பது ஓரளவுக்குத்தான் உண்மை.

எப்போதுமே இந்தியா தன் மேலாதிக்கத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி இருக்கிறது.

பிரச்னை தமிழர்களுக்கும்-சிங்களர்களுக்கும்.

ஆனால் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்களர்களும் கையெழுத்திட்டது எப்படி?   தமிழர்கள் எப்போது தங்கள் பிரதிநிதியாக இந்தியாவை நியமித்தார்கள்?

இந்த முரண்பாடுகளுக்கு விடையே கிடைக்காது. ஏன் என்றால் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் இந்த துணைக் கண்டத்தில் ஒரு தீர்வு என்பது ஏற்பட முடியாது.

இந்தியாவின் வெளி நாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் தமிழர்கள் உரிமையைப் பற்றி மட்டுமே கவலை கொள்பவர்களாக இருந்தது இல்லை. அவர்கள் சிங்களர்களின் நலன்களையும் சேர்த்தே கொள்கை முடிவு எடுப்பார்கள். இலங்கை சீனா பக்கம் சாய்ந்து விடும் என்ற அச்சம் .

ஆனால் வரலாறு அந்த அச்சத்தை உண்மையாக்கி வருகிறது.

பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைக்கு தீர்வு என்று விடுதலைப்புலிகள் வலுவோடு இருந்த வரை சொல்லிக் கொண்டிருந்த இந்தியா அவர்கள் வீழ்த்தப் பட்ட பிறகு மௌநித்தது ஏன்?

இந்தியாவில் இந்து மத வாதம் வெற்றி பெற்றது போல் இலங்கையில் பௌத்த மத வாதம் வென்றிருக்கிறது. இதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை.

தன் மக்களை அடக்கி ஆண்டு கொண்டு பொருளாதார ரீதியில் எவரும் வெல்ல முடியாது.

அந்த பொது நியதி இந்தியாவுக்கும் பொருந்தும்..

This website uses cookies.