இஸ்ரேல் யூதர்களின் நாடு .
அதாவது பலவந்தமாக கட்டமைக்கப் பட்ட நாடு.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய அரபு உறுப்பினர்கள் உள்ளனர். இஸ்ரேலிய அரபு மக்கள் இருபது சதம் உள்ளனர்.
மொத்தமே 90 லட்சம் மக்கள் தொகையில் 20 % அரபு மக்களை கொண்டிருக்கிற இஸ்ரேல் சட்டப்படி சம உரிமை பெற்றிருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள். அரபு மொழிக்கான அந்தஸ்தும் குறைந்து விட்டது.
யூத நாடாக ஆக்குவதா வேண்டாமா என்பதை எட்டு மணி நேரம் விவாதித்து கடைசியில் 62 எம்பிக்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 55 எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர் என்பதே ஆச்சரியம்.
பிரதமர் நெதன்யாகு மசோதா நிறைவேற்றத்தை சிறப்பு வாய்ந்த தருணம் என புகழ்ந்துள்ளார்.
யூத மதம் ஏசு கிறிஸ்துவை கடவுள் என்றோ இறைவனின் தூதர் என்றோ ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும் கிருஸ்தவர்கள் யூதர்களை எதிரிகளாக பார்ப்பதில்லை. ஏனென்றால் ஏசு யூதர்தானே.
யூத மதம் கடவுளை பெயர் சொல்லி அழைக்காமல் மிகவும் மரியாதையுடன்
‘அவர்’ ‘அந்த பெயர்’ என்று அழைக்கின்றனர். நிச்சயம் வருவார் என்று கடவுளை எதிர் பார்த்து காத்திருக்கும் யூதர்கள் வித்தியாசமானவர்கள்.
பலம் ஒன்றே வாழவைக்கும் என்பதை இஸ்ரேலிக் காரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் ஜெருசலத்தை அவர்கள் கைப்பற்றி அதுவே தங்கள் தலைநகரம் என்று அறிவித்திருப்பது வலுவுள்ளவன் எதையும் செய்யலாம் என்பதை தற்காலத்தில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
அஹமது டிபி என்ற அரபு எம் பி மசோதா நிறைவேறியது ஜனநாயகம் செத்து விட்டது என்பதை காட்டுகிறது என்றார்.
ஜனநாயகம் இருந்திருந்தால் இஸ்ரேல் நாடே உருவாகி இருக்காதே!