தமிழில் இனி தேசிய கீதம் இல்லை ; சிங்கள இனவெறி அரசு முடிவு?

இலங்கையின் சுதந்திர தினத்தன்று இதுவரை சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம பாடப் பட்டு வந்தது.

இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப் படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடப் படுவது நிறுத்தப் படுவதாகவும் சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இருப்பதைப் பறிப்பவர்கள் இல்லாததையா கொடுக்கப் போகிறார்கள்?

சிங்களர்களிடம் தமிழர்கள் இனி அரசியல் தேர்வை பற்றி கனவு கூட காணக் கூடாது என்ற நிலையை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி விட்டன.

இரண்டாம் தர குடிமக்கள் ஆக வாழ்வது மட்டுமே சாத்தியம் என்றாகி விட்டது.

இந்திய அரசு தலையிடும் என்ற நம்பிக்கையும் சிதைந்து வருகிறது. ஆனாலும் வேறு வழியின்றி இந்திய அரசிடம்தான் நாம் கோரிக்கை வைக்க வேண்டியவர்கள் ஆக இருக்கிறோம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் எப்போது ஆட்சி மாறுவது எப்போது இதைப்பற்றி எல்லாம் பேசுவது?

ஐந்து பத்து ஆண்டுகள் எல்லாம் கால ஓட்டத்தில் சில நொடிகள்.

இந்தியாவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான  மத்திய அரசு அமைய வேண்டும். மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு அதன் பின்தான் வெளி உறவுக் கொள்கைகளை இறுதி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும்.   அப்போது தமிழ் நாட்டு அரசின் கருத்துக்களை ஏற்று மத்திய அரசு செயல்  பட வேண்டும். அப்போது மட்டுமே  இலங்கை பிரச்னை தீர வழி பிறக்கும்.

அதுவரை காத்திருப்போம். இடையில் தளராது கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருப்போம்.